தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் கலந்துரையாடல் (படம்)
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
தம்புள்ள புனித பிரதேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒரு கலந்துரையாடல் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
ரங்கிரி தம்புள்ள விகாராதிபதி சாஸ்திரபதி பண்டித இனாமலுவே சுமங்கள நாயக்க தேரர்- புத்த சாஸன மற்றும் சமய விவகார பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன- பிரதியமைச்சர் நந்தி மித்ர எக்கநாயக்க- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


Post a Comment