Header Ads



கிண்ணியாவில் அதிக வெப்பம் - மாணவர்கள் அவதி


(அபூ அஹ்ராஸ்)

தற்போது நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக கிண்ணியாவில் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கும், தோல் நோய்களுக்கும் முகம்கொடுத்து வருவதாக பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள்  கவலை தெரிவித்துள்ளனர். இதில் கீழ் தரத்து மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

பாடசாலை மாணவர்களின் நிலை பற்றி பெற்றோர்கள் எமக்கு தெரிவிக்கும் போது 'எங்கள் பிள்ளைகள் தற்போது அதிக வெப்பத்தினால் களைப்பு மற்றும் தோல் நோய்களுக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. இதனால் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை மாற்றமடையும் வரை பாடசாலை நேரத்தை குறைப்பதற்கான வேண்டுகோளை கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளருக்கு கடிதம் மூலம் கொடுக்க இருக்கின்றோம். இதனை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி வலயக்கல்வி பணிப்பாளர் குறித்த விடயத்தினை கவனத்தில் கொள்வாரென நம்புகின்றோம்' என பெற்றோர்கள் தெரிவித்ததோடு பாடசாலை மாணவர்களும் தங்களது ஆதங்கத்தினை அவ்வாறே தெரிவித்தனர். உரிய பொறுப்பிலிருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர் இதனை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பாரென நம்புகின்றோம்.

No comments

Powered by Blogger.