அட்டாளைச்சேனையில் விதைநெல் சுத்திகரிப்பு அலகு திறந்து வைக்கும் நிகழ்வு
(எம்.பைஷல் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் விதைநெல் சுத்திகரிப்பு அலகு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று 2013.04.02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீலாத் நகரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இத்தாலி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பாப்ரிசியோ பியோ அர்பியாவுடன் இணைந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் விதைநெல் சுத்திகரிப்பு அலகை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அதிதிகளினால் விதைநெல் சுத்திகரிப்பு இயந்திரத்தை பார்வையிட்டதன் பின்னர் அவ்வியந்திரத்தின் மூலம் நெல்கள் எவ்வாறு சுத்திகரிப்பு செய்யப்படுகின்றது. என்பதையும் பார்வையிட்டனர்.
இவ்விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் விதைநெல் சுத்திகரிப்பு அலகுக்கென 20 மில்லியன் ரூபாவினால் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment