திருகோணமலையில் அரச ஊழியர்களுக்கான வீட்டுத்திட்டம்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவௌ பிரதேசத்திலுள்ள அரச ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டமொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக பௌத்த சாசன பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
யுத்த காலம் தொடக்கம் இன்று வரை பல வருட காலங்களாக விடுதிகளில் தங்கியிருந்து தொழில்களை மேற்கொண்டு வருவதாகவும்,தங்களுக்கு அரசினால் வீட்டுத்திட்டமொன்று கூட வழங்கப்பட வில்லையெனவும் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
வீடமைப்பு,நிர்மான அமைச்சின் ஊடாக இவ்வீட்டுத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்,இரண்டு வாரங்களுக்குள் அமைவிடத்தை தெரிவு செய்யுமாறும், விண்ணப்பபடிவங்களை அரச ஊழியர்களுக்கு வழங்கி தகவல்களை பெற்றுக்ககொள்ளுமாறு பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் இனமத பேதமின்றி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பிரதேச சபைத்தலைவருக்கும்,சக உறுப்பினர்களுக்கும் பௌத்த சாசன பிரதியமைச்சர் குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.பி.பிரேமதாச வனவல அதிகாரி,பொலிஸ் பொறுப்பதிகாரி,மற்றும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ஐயந்த விஐசேகர ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment