'நான் இறக்க முன் குரோதங்களுக்கு முற்றுப்புள்ளியிட முடியுமா என எண்ணிப்பார்த்தேன்'
நாட்டில் யுத்தம் முடிந்து அமைதியான சூழல் நிலவி கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் சில இயக்கங்கள் இனவாதம், மதத் துவேஷம் மற்றும் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு செயற்பாடுகளால் நாட்டில் பாரிய இன்னல் தோன்றாலாம். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயக்கங்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
'எம்மை நாமே வெற்றியடைதல் ஆயிரம் யுத்தங்களில் வெற்றியடைவதிலும் சிறப்பானது" என்ற தொனிப்பொருளில் ஒருமைப்பாட்டுக்கான பேரணியால் இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் அமைதிப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இவ்வாறானதொரு பேரணி மேற்கொள்ளப்பட்டமை சந்தோசமாக உள்ளது. சில இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் மதத் துவேஷமான குரோத செயற்பாடுகளுக்கு நான் இறப்பதற்கு முன் முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என எண்ணிப்பார்த்தேன். ஆனால் இச்செயற்பாடுகளை இல்லாதொழிக்க ஒருமைபாட்டுக்கான பேரணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் மீண்டும் ஒரு இனவாதம் தோன்றுவதற்கு முன்னர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார். vi

very good work hon.sadu please keep it up.
ReplyDeletewe will with you---------------for this country--not as a muslim-not as a hindu-not as a budhist----
ReplyDelete