நிந்தவூரில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்
(சுலைமான் றாபி)
இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தேர்தல் எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுவினை நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகம் சார்பாக அதன் தலைவர் எஸ்.எம் ஷாபி (29.04.2013) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியாணி ஆர்.யு அப்துல் ஜலீல் அவர்கள் முன்னிலையில் காலை 11.15 மணியளவில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இந்த வைபவத்தில் மாவட்ட உதவிப் பதிவாளர் இசட். நசிர்டீன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. எஸ். முஹைடீன், கிராம சேவை உத்தியோகத்தர் எம். அஜ்வத், இளைஞர் சேவை அதிகாரிகளான எம்.ஐ.எம் பரீட், எம்.ரி.எம் ஹாரூன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல் அனஸ் அகமட், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், நிந்தவூர் இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான எஸ்.எம் இஸ்மத், தேர்தல் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களான எம். சிம்றி அகமட் மற்றும் எம்.பி.ஏ இக்ரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இளைஞர் பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி, இளைஞர் சபாநாயகர், பிரதி சபா நாயகர், 77 செனட் சபை உறுப்பினர்கள், 13 மந்திரி சபை உறுப்பினர்கள், எதிர்கட்சித்தலைவர், வீட்டின் தலைவர், அரச பிரதிநிதி, கொள்கை அமைப்பாளர்கள் போன்றோர்கள் நியமிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வேளை இம்மாதம் 30ம் திகதி நண்பகல் 12 மணி வரைக்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி எம் ஹாரூன் தெரிவித்தார்.


Post a Comment