''சமூக மயமாக்களில் கதீப்மார், இமாம்கள், முஅத்தின்கள், முஅல்லிம்களின் பொறுப்பு”
(ஜூனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சமூக மயமாக்களில் கதீப்மார்,இமாம்கள்,முஅத்தின்கள்,முஅல்லிம்களின் பொறுப்பு” எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று இன்ஷா அழ்ழாஹ் பின்வரும் விபரப்படி நடைபெறவுள்ளது.
காலம் : 01-05-2013 ( புதன்கிழமை ) நேரம் : 8:30 மணி முதல் 11:45மணி வரை
இடம் : பத்ரியா ஜும்மா பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-1
இக்கருத்தரங்கின் வளவாலராக அட்டாளைச்சேனை தேசிய கல்விஇயல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க்.அன்சார் பளீல் மௌலான (நளீமி) அவர்களும் கலந்து சிறப்பு விரிவுரையாற்றவுள்ளதோடு,இன்னும் பல கல்விமான்களும் கலந்து கொள்ளவுள்ளதோடு, இறை பணியாளர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பும் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. சகல அங்கத்தவர்களும் இக்கருத்தரங்கில் உரிய நேரத்திற்கு சமூகமளித்து பயன்பெறுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் மௌலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment