Header Ads



ஜம்மியத்துல் உலமாவை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதை ஏற்கமுடியாது - முஸ்லிம் கவுன்சில்


சில சிங்கள அமைப்புக்களும், சிங்கள சமூகம் சார்ந்த அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது என முக்கிய பௌத்த தேரர்களிடம் முஸ்லிம் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று திங்கட்கிழமை, 8 ஆம் திகதி, பௌத்த தேரர்களுக்கும், முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பிலேயே பௌத்த தேரர்களிடம் இவ்விடயங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

பௌத்த தேரர்கள் சார்பில் இச்சந்திப்பில் இத்தபான தேரர், சோபித்த தேரர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பு குறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வழங்கிய தகவல்கள் வருமாறு,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ள அமைச்சரவை உபகுழு அண்மையில் கூடியபோது அமைச்சர்கள் சிலர் ஜம்மியத்துல் உலமாவை குற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக ஜம்மியத்துல் உலமா இதுகாலவரையும் கலால் சான்றிதழை வழங்கிவந்தமை சட்டவிரோதமானது என வாதிட்டுள்ளனர். அமைச்சரவை உபகுழுவிலும் இவ்விவகாரம் உள்ளடக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எனினும் ஜம்மியத்துல் உலமாவை குற்றவாளி கூண்டில் ஏற்றும் எத்தகைய அறிக்கைகளையும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மதித்து, முஸ்லிம்களை சமய ரீதியாக வழிநடாத்தும் ஜம்மியத்துல் உலமா சபையானது இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளது. இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், ஜம்மியத்துல் உலமா சபையையும் கொச்சைப்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பிரச்சாரங்களை சிங்கள மக்களுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள பௌத்த பிக்குகள் தடுத்துநிறுத்த வேண்டும். சிங்கள மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நல்லுறவை கட்டிவளர்க்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கு பதில் வழங்கியுள்ள பௌத்த தேரர்கள், தேசிய விவகாரங்களில் முஸ்லிம்கள் இன்னும் பங்காற்ற வேண்டும். முஸ்லிம்களும் இந்நாட்டு பிரஜைகளே. தேசிய நீரோட்டத்தில் இணைவதன் மூலம் சமூகங்களுக்கிடையில் உறவுகள் வலுவடையும். பௌத்த தேரர்கள் என்ற அடிப்படையில் சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் இனஐக்கியத்திற்கு தம்மால் முடிந்த பங்களிப்புகளை செய்வதாகவும் இதன்போது வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

3 comments:

  1. iru samukatthilum ulla nallaennemum aikkiyamum valara ulappavarkalai velikkonara vendum

    ReplyDelete
  2. அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டுத்தானே இதுவரைக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது,

    ReplyDelete
  3. அப்போ ஜெனிவா பிரேரனையின்போது மட்டும் உலமாசபை இவர்களுக்கு தேவையா?அப்போ உலமா சபை ஏன் இன்னும் ஏற்றுமதிக்கு ஹலால் சான்றிதல் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.உலமா சபையின் பின் முஸ்லிம்கள் ஒன்றுபடுவது நரிகளுக்கு பிடிக்கவில்லை

    ReplyDelete

Powered by Blogger.