வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சுதந்திர ராஜபாட்டை' திறந்துவைப்பு
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'சுதந்திர ராஜபாட்டை' அல்லது 'பாதெனிய அனுராதபுரம் மார்க்கம்' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொரியக் கூட்டரசின் 700 கோடி ரூபா நிதியுதவியுடன் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்தப் பெருந்தெரு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
15 மீற்றர் அகலமும், 80 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்தப் பாதை மறு சீரமைக்கப் பட்டுள்ளதன் மூலம் வடமேல் மாகாணத்திலிருந்து பாதெனிய ஊடாக வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு நேரடிப் போக்குவரத்து வசதி ஏற்பட்டுள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிர்மலகொத்தலாவல தெரிவித்துள்ளார்.

Post a Comment