Header Ads



இனத் தேசியாவதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது - அரசாங்கம்


இனத் தேசியாவதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சகல பிரஜைகளும் சுபீட்சமாக வாழக்கூடிய ஓர் சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இனப்பிரச்சினையை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் இந்த முயற்சி வெற்றியளிக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான சகலவிதமான குற்றச்சாட்டுக்களையும் உரிய முறையில் விசாரணை நடாத்த தயார் எனவும், உலகின் ஏனைய ஜனநாயக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகவும், இவை பிழையான தகவல்களின் அடிப்படையில் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. அறிக்கைக்கு மட்டும் குறைவு இல்லை ஆனால் இதுவரை எதையும் செயலில் காணோம் மாறாக முஸ்லிகளால் ஏற்பாடுசெய்யப்பட்ட பொதுகூட்டம் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.