Header Ads



யாழ் முஸ்லீம் வர்த்தக சங்கம் உதயம்



(பாறூக் சிகான்)

யாழ்  மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்கள் ஒன்றினைந்து தமக்கென ஒரு சங்கம் ஒன்றினை ஏற்படுத்த நேற்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடினர். யாழ் முஸ்லீம் வர்த்தக சங்கம் எனும் பெயரில் அமைக்கப்படவுள்ள இவ்வமைப்பு தொடர்பான ஆரம்ப நிகழ்வு ஒஸ்மானிய கல்லூரியில் வர்த்தகர் எம்.எல் லாபீர் தலைமையில் நடைபெற்றது. இதன் ஆரம்பமாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மௌலவி மஹ்மூத் பலாஹி யின் உரை இடம்பெற்றது.

மேலும் இவ்வமைப்பின்  நோக்கமாக எதிர்காலத்தில் முஸ்லீம் வர்த்தகர்கள் தொடர்பான பிரச்சினை, அதற்கான தீர்வுகள், தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக தலைமையுரையில் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்வில் 60 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இச்சங்கத்தை ஆரம்பிக்கவென 13 பெர் கொண்ட உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.அதுதவிர ஏற்கனவே யாழ் வணிகர் சங்கம் யாழ்மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. யாழ் வர்த்தகர்களுக்கு என்று வணிகர் கழகம் சிறப்பாக இயங்கி வருகின்றது. இந் நிலையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு என்று தனியாக சங்கம் அமைப்பது என்பது சமூக பிளவையே ஏற்படுத்தும் என நான் கருதுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.