Header Ads



அக்கரைப்பற்றில் ஆரம்பக்கல்வி நியமங்கள் தொடர்பான ஆய்வு


(அனாசமி)

ஆரம்பக்கல்வி தொடர்பான நியமங்கள் தயாரிப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 2015ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆரம்பக்கல்விக்கான புதிய கலைத்திட்டத்திற்கு உள்வாங்கப்படவுள்ள தரம் ஒன்று மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த 50நாட்களாக அக்கரைப்பற்று வலயத்திலுள்ள அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரியில் விசேடமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு வெற்றிகரமாக முடிவுற்றது. எட்டு மாணவர்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டு அம்மாணவர்களின் நடத்தைகள், செயற்பாடுகள், பங்குபற்றல்கள், கற்றல் ஈடுபாடுகள் தொடர்பாகவும் நேரடிக்களத்திலிருந்து ஆய்வு செய்யப்பட்டதுடன், இம்மாணவர்களின் பெற்றோர்கள், கற்பிக்கும் ஆசிரியர் ஆகியோரிடமும் மாணவர்களது நடத்தைக் கோலங்கள் வினவப்பட்டு ஆய்வு செய்யப்பட்டனர். இதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட 26 விருத்தியம்சங்கள் தொடர்பான 90 விடயங்கள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், இதற்குரிய கற்றல் உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆசிரிய ஆலோசர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்தார்.

நியமங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட இறுதிநாள் நிகழ்வில்(01.04.2013) அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். கியாஸ், ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், பாடசாலையின் அதிபர் ஏ.ஜே. அன்வர், வகுப்பாசிரியை எஸ். பரூசா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக தயாரிக்கப்படுவதற்கு உதவிய பாடசாலையின் வகுப்பாசிரியை, அதிபர், பிரதியதிபர் மற்றும் வலயத் தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இதற்கு பக்கபலமாக உதவிய உதவிக் கல்விக் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல். முகம்மட் காசீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ. முத்தலிப் ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்துள்ளார்.




3 comments:

  1. நல்ல விடயம். இவ்வாறான் ஆய்வு நடவடிக்கைகள் நகரத்தில் உள்ள சிறந்த பாடசாலைகளின் விளம்பரத்துகாக செய்யப்படாமல் மிக பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், பாடசாலைகளில் எவ்வாறு இவற்றை சாத்தியப்படுத்தலாம் என்பதைக்கன்டறிவதன் மூலமே சகல பாடசாலைகளுக்கும் பொருத்தமான ஆய்வுமிடுவினை கன்டறிய முடியும். அப்போதுதான் எதிர்கொள்ளும் பிரட்ச்சினைகள், அவற்றை எவ்வாறு தீர்த்துகொள்ளுவது என்பனபற்றியும் தீமானிக்கலாம். தொடரட்டும் ....

    ReplyDelete
  2. உங்களுடைய கருத்தை நாம் வரவேற்கின்றோம் அத்துடன் ஆய்வுச் செயற்பாடு எனும்போது பின்தாங்கி பாடசாலை மாணவர்களையும் கொண்டதாக அமையவேண்டும் அப்போதான் ஒரு ஒழு முழுமையான ஆய்வறிக்கைத் தயாரித்து அதற்கான நிவர்த்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் இல்லாதுவிடத்து பின்தாங்கி அல்லது கிராமப்புர பாடசாலைகள் எதிர் காலத்துடன் போட்டிபோட முடியாத ஒரு நிலை உருவாகும் என்பதைக் கவணத்தில் கொண்டு செயற்படுங்கள் ”விளம்பரத்துக்காக எதையும் செய்யாதீர்கள்.”

    ReplyDelete
  3. To He Opinion and Rahmathullah.

    I always like to see the genuine comments but rather dislike the comments which are written for the sake of writing one.

    I am a parent and I know how this project was carried out. And also the ins and outs of it. Simply saying this project was conducted throughout the island and schools were selected randomly. in which the urban level and village level schools were included in this research. Even my district, Batticaloa some schools were selected.

    The researchers were selected among the ISAs in provincial levels and they had 3 days residential workshop in Colombo regarding the matter. As far as I understand that the research reports done, in urban and village level schools, by these ISAs. The said report will be consolidated and analyses to determine the educational development.

    If I hurt your feelings in anyway I am sorry.

    ReplyDelete

Powered by Blogger.