Header Ads



உலமா சபை + பொதுபல சேனா சந்திப்பு எதிர்காலத்திலும் தொடரும்



அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் பொது பல சேன ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் பொது பல சேன ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் இருதரப்பிலும் 8 பேர் பங்குகொண்டுள்ளனர். இச்சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்பாகவே இருந்ததாகவும், எதிர்காலத்தில் இதுதொடர்பிலான சந்திப்புகளில் தொடர்ந்து ஈடுபடுவதெனவும் இருந்தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

எதிர்கால சந்திப்புக்களில் எட்டப்படும் தீர்மானங்களை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதெனவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

4 comments:

  1. சந்திப்புக்கள் நல்லது தான். ஆனால் மிக மிகக் கவனமாகக் கையாள வேண்டும். சந்திப்புக்கள் என்று ஆரம்பித்து எமது தனித்துவங்களிலும், உரிமைகளிலும் எவரும் விரலடிக்க முணையலாம். உயரே பார்த்துக் கொண்டு அவசர முடிவுகள் எடுத்து விடுவதைத் தவிர்க்க வேண்டும். சந்திப்புக்களை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மார்க்க விடயங்களை முன்வைக்கலாம். முஸ்லிம்களைப் பள்ளிக்கு அழைப்பதும், தஃவாப் பிரச்சாரம் செய்வதும் மாத்திரமே இஸ்லாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த தவறை இப்போதாவது புரிகிறோமல்லவா?

    ReplyDelete
  2. ஆமாம் சுபகுத்தொளுகையில் குனூத் ஓதவேண்டாம் என்று சொல்லி இருக்கிறீர்களே - இது சந்திப்புக்கு முன்னா?இல்லை பின்பா?

    ReplyDelete
  3. BBS உடன் சந்திப்பு, அதுவும் பாதுகாப்பு அமைச்சிலா? இதில் என்ன தீர்மானம் எடுப்பார்கள்? BBS ஒரு தீர்மானத்தை எடுக்கும். அதை கோட்டா "ஏற்றுக்கொள்ளுங்கள் உயிரில் பயமிருந்தால்" என்று மிரட்டுவார். உடனே ACJU ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்? அது சரி, பாதுகாப்பு அமைச்சுக்கும் சமூகப் பிரச்சினை ஒன்றுக்கும் என்ன சம்பந்தம்? தெட்டத் தெளிவான மற்றுமொரு ஆதாரம் கோட்டாவின் BBS சம்பந்தத்துக்கு.

    ReplyDelete

Powered by Blogger.