முஸ்லிம் என்றால் இப்படியா..?
(இ. அம்மார்)
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் கண்டி கடுகதி புகையிரத அனுமதி பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் தாடி தொப்பி போட்ட முஸ்லிம் நபர் ஒருவருக்கு ஹலால் பற்றுச் சீட்டு வழங்கும் சம்பவம் ஒன்று நேற்று பி. ப. 2.45 மணி அளவில் நடைபெற்றுள்ளது.
கண்டி செல்வதற்காக தம் மகனுடன் கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தில் டிக்கட் பெறுவதற்கு வரிசையில் அந்த முஸ்லிம் நபர் நின்று கொண்டிருந்தார். அதுவும் அவர் தம் மகனுக்கு சேர்த்து இரு டிக்கட் பெறுதற்காகவே நின்று கொண்டிருந்தார். மகன் சற்று தூரத்தில் நின்றார், அவர் சிறுது நேரம் தூர நின்று விட்டு தந்தைக்கு அருகில் வந்துள்ளார். அவருக்கு முன்னால் சுமார் 10 பேரும் பின்னால் சுமார் 7 பேர் அளவில் நின்றனர். தம் தந்தைக்கு அருகில் மகன் வந்ததுடன் அருகில் முன் பின் நின்ற பெரும்பான்மையின சகோதரர்களால் சிறு சல சலப்பு அவ்விடத்தில் ஏற்பட்டுள்ளது.
வரிசையில் நிற்கும் ஒருவருக்கு மாத்திரம்தான் டிக்கட்டைப் பெற முடியும். இடையில் வந்த நபருக்கு டிக்கட் பெற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்கள் இப்படித்தான் குறுக்கு வழியால்தான் எதையும் செய்வார்கள் எனக் கூறி அங்கு முன் பின் வரிசையில் நின்றோர் சிலர் சிறு சல சலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவரது மகன் தம் தந்தை என வாதிட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் பின் வரிசையில் நின்ற பெண் ஒருவரும் அந்நபரின் மீது முணுமுணுத்தார். அவர் அருகில் நின்ற இன்னுமொரு முஸ்லிம் நபர் தான் பார்த்ததிலிருந்து அவர் இங்கேதான் நிற்கிறார் என விளக்கமளித்துள்ளார். எனினும் அந்தப் பெண்ணும் ஏற்றுக்கொள்ள வில்லை.
இந்த சம்பவத்தை அவதானித்த புகையிரத டிக்கட் வழங்குனர் அந்த முஸ்லிம் நபரை அழைத்து இருவருக்குமான டிக்கட்டை வழங்கினார். அவர் வழங்கும் போது ஹலால் டிக்கட் எனக் கூறி வழங்கிய சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
இதில் முக்கிய விடயம் என்னவெனில் அங்கு முணு முணுத்துக் கொண்டிருந்த பெண்ணும் அயலில் இளம் யுவதியை நிறுத்தி வைத்துவிட்டு இரு டிக்கட்டைப் பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு நிலையத்திலும் ஒருவருக்கு ஒரு டிக்கட் என்ற அறிவித்தல் விடுக்கின்ற விளம்பரப்பலகை தொங்க விடப்பட வேண்டும். இந்த ஒழுங்கு விதி ஒன்று புகையிரத நிலையத்தில் இனிமேல் நடமுறைப்படுத்த வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்து கொண்டிருக்கிறது...!

The railway department should take legal action against that officer as he has no right to say that it is halal ticket.A government officer is a public servant at first, so he has to behave equally amongst all citizens.
ReplyDeleteellam nanmaikke poruthudhan parppom porumaiyalanudan Allah irukkindran
ReplyDelete