Header Ads



சீனத் ரஹ்மாவின் 'புறப்படு மகனே' (படங்கள் இணைப்பு)



(அஸ்ரப்.ஏ.சமத்)

கம்பஹா பூகொடை பெண்படைப்பாளி சீனத் ரஹ்மாவின் 'புறப்படு மகனே புறப்படு'  கவிதை மற்றும் எந்தக் காலம் எனும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீடு நேற்று (07)ஆம் திகதி பூகொடை குமாரிமுல்லை முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக நீர்n;காழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  எம்.எம்.ஏ கபூர், கௌரவ அதிதியாக புரவலர் ஹாசீம் உமர்,  நூல் விமர்சனம்  தேர்தல் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அஷ்சேக் எம்.எம். முஹம்மத்,  சிறப்புரை பரிட்சைத் திணைகளத்தின் பரீட்சைகள் பெறுபேறு பிரிவின் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத் நிகழ்த்தினார்கள்.

மேலும் குமாரிமுல்லை முஸ்லீம் மகா வித்தியாலத்தின் அதிபர் எம்.ரீ.எம் ஹாசீம்,  முன்னாள் அதிபர் மசுத், சமுகஜோதி றபீக், ஆகியோரும் உரையாற்றினார்கள்.

நூலின் முதற்பிரதியை பிரதம அதிதி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ கபூரிடமிருந்து  புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டார்.  இந் நிகழ்வில் இப்பகுதியைச் சேர்ந்த பெருந்தொகையான பெண்கள் மண்டபம் நிறைந்து காணப்பட்டனர். சகலரும் சீனத் ரஹ்மாவின் நூலை அதற்கான பெறுமதியை கொடுத்து வாங்கிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.   


No comments

Powered by Blogger.