Header Ads



முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவு அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்



(முல்லையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறவரும் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும்,இப்பிரதேசத்தில்  இனக்கலவரமொன்றுக்கு துபமிடும் வகையில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்தும்,இது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கக் கோறும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று (2013.-04-08) முல்லைத்தீவில் இடம் பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட தமிழ்-முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் இப்பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களும்,அதற்கு ஆதரவாக தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,கோஷங்களை முழங்கியும்,பதாகைகளை ஏந்தியும் காணப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்வரும் வாஷகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி நின்றனர். தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம் தமிழ் தேசிய கூட்டமைப்பே இதனை தடுக்காதே!
உதயன் பத்திரிகையே இன,மத,பிரதேச வேறுபாடுகளை துண்டி பத்திரிகை நடத்துவது தான் பத்திரிகை தர்ம்ம்மா? ஊடகங்களே! நடு நிலையுடன் செயற்பட்டு இன,மத ஒற்றுமைக்கு உதவுங்கள் உரிமை கோறும் முஸ்லிம்கள் நாம்,வந்தேறு குடிகளல்ல,நாம் முல்லையின் பூர்வீக குடிகள். தமிழன் எமது சகோதரன்,முஸ்லிம் எமது உறவின்ன்,முல்லை எனது தாயகம் இனவாதம்,மதவாதம் பேசி முஸ்லிம்களை முல்லையிலிருந்து விரட்டியடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பே சதி செய்யாதே!

எந்த குற்றமும் செய்யாத எமது முஸ்லிம் சமூகம் மீள்குடியேறிவரும் போது, அதனை தடுக்கின்றாயே….தமிழ் தேசிய கூட்டமைப்பே உனக்கு மனசாட்சி தான் இல்லையா ,நாங்கள் வந்தேறு குடிகளல்ல  பூர்வீக முஸ்லிம் குடிகள் போன்ற வாசகங்களையும் ஏந்தி நின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கணகரத்னம்,அமைப்பின் தலைவர் முஹம்மத் ஜிப்ரி,மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் உட்பட முல்லை மாவட்டத்தில் உள்ள தமிழ்,முஸ்லிம் மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேரணியினால் முல்லை நகரப்புகுதியில் போக்குவரத்து நெறிசல்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை பேரணியின் நிறைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளிக்கும் மகஜர் ஒன்றினை அமைப்பின் பிரதி நிதிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கையளித்தனர்.






1 comment:

  1. UTHYAN PAPAER ALLOW PEOPLE TO LIVE IN THE EARTH. WHY THESE KOLAVERY FOR YOU

    ReplyDelete

Powered by Blogger.