Header Ads



யாழ்ப்பாண மணிக்கூட்டுக் போபுரம் புனரமைப்பு



இலங்கையிலே மிகவும் பிரபல்யமான மணிக்கூட்டுக்கோபுரம் யாழ் நகரின் முக்கிய கேந்திர நிலையத்தில் அமைந்து இருப்பதும் யாழ்.மாநகரத்தின் பாரம்பரியத்தை வெளிக்கொணர்வதாகவும் உள்ளது. இக்கோபுரத்தில் இருந்துதான் எல்லா இடங்களுக்கு செல்லும் தூரங்கள் கணிக்கப்பட்டு வந்தமையும் வரலாற்று உண்மையாகும்.

இக்கோபுரத்தின் வரலாற்றை நோக்குமிடத்து 1929 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரித்தானிய முடியாட்சியின் வேல்ஸ்  இளவரசரால் தனது வருகையின் ஞாபகார்த்தமாக 150 உஅ விட்டமுடைய 04 மணிக்கூடுகள் அரச அதிபதியாக இருந்த பிறவுண் அவர்களிடம் கையளிக்கப்பட்டது மக்களின் நன்மை கருதி  இக்கோபுரம் 1934 ஆம் ஆண்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டது. இக்கோபுரம் இலங்கை வரலாற்றில் மிக உயரமானதும் பழமையானதுமாக காணப்படுகிறது.

யாழ்.நகரினை அழகுபடுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாகவும் யாழ் மாநகரின் வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூட்டுக்கோபுரம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா  முயற்சியினால்  மீண்டும் வர்ணம் தீட்டி, பழைய நான்கு கடிகாரங்களுக்கு பதிலாக புதிதாக அதே அளவில்  இலக்கமிடப்பட்ட கடிகாரங்கள் பொருத்தப்பட்டு இன்று கம்பீரமாக காட்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கோபுர புனருத்தாரன வேலைகள் செய்யப்பட்டு  9 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா செலவில்  நான்கு புதிய கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து இச்சுற்றாடல் அழகுபடுத்தப்பட்டு மிக விரைவில் மக்கள் மயப்படுத்தப்பட உள்ளது. 

No comments

Powered by Blogger.