Header Ads



பொறியியல் உதவியாளர்கள் வேலை நிறுத்தம் - அம்பாறை மக்கள் அசெகரியம்


(ஏ.எல்.நிப்றாஸ்)

பொறியியல் உதவியாளர்கள் அடையாள வேலை நிறுதத்தில் குதித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் சிலவற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வழங்கல் தடைப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகளில் நீர்விநியோகம் சீரற்ற வித்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

குறிப்பாக நிந்தவூர் மற்றும் அதனையண்டிய கிராமங்களுக்கான நீர்வழங்கல் சனிக்கிழமை முதல் தடைப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு நீர்வழங்கும் பிரதான தாங்கியின் வால்வு ஒன்று உடைந்த தையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவாறு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

நாட்டின் பல பாகங்களிலும் பணியாற்றும் பொறியியல் உதவியாளர்கள் தற்போது அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீர் விநியோக வலையமைப்பில் விடுமுறை தினங்கள் மற்றும் இரவு நேரங்களில் திருத்தப்பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் நிந்தவூர் போன்ற பிரதேசங்களுக்கான நீர் வழங்கல் இன்று மாலை வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை போன்ற பகுதிகளில் வழக்கமாகவே குறைவான அழுத்தத்துடனேயே நீரைப் பெற்றுக் கொள்ள முடிவதாக வீட்டுரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

1 comment:

  1. இந்தப்பொறியியல் உதவியாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா? அவர்களுக்கும் பொறியியலாளர்களின் தரம் வழங்க வேண்டுமாம். இதுவும் நல்ல யோசனைதான். இனிமேல் எந்தப்பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு கணித பிரிவில் படிக்க வைத்து, க.பொ.த.உயர்தரப்பிரிவில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகத்திற்குச்சென்று நான்கு வருடம் கஷ்டப்பட்டு பொறியியல் பட்டம் பெற வேண்டுமென்ற எந்தக் கவலையும் வேண்டாம். மாறாக,நீர் வழங்கல் சபையில் சேர்ந்து விட்டால் மட்டும் போதும். சில வருடங்களிலேயே தானாகவே பொறியியலாளர் ஆகிவிடலாம். கிறுக்கனுகளுக்கு பொறியியலாளர் ஆவதற்கான நல்ல குறுக்கு வழி. ஆசைப்படுவதற்கும் ஒரு எல்லையுண்டல்லவா? "ஒண்ணுமே புரியல்ல உலகத்தில"......

    ReplyDelete

Powered by Blogger.