முல்லைத்தீவில் முஸ்லிம்கள் குடியேற தடை..!
முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் உள்ள வன வள திணைக்களத்திற்குரிய காணியை துப்பரவு செய்து முஸ்லிம்களுக்குகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதற்கு தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முல்லைத்தீவிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழ்வருமாறு,
ஜனாதிபதி செயலணி அடையாளம் கண்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான சகல ஏற்பாடுகளும் நேற்று சனிக்கிழமை முடிவடைந்திருந்த நிலையில்,
சம்பவ இடத்திற்கு தமது ஆதரவாளர்கள் சகிதம் வந்துள்ள ஈ.பி.டி.பி.யின் இணைப்பாளர் ஒருவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோனதலிங்கம் ஆகியோரும் தமது ஆதரவாளர்கள் சகிதம் அங்கு விரைந்துவந்து முஸ்லிம்களை அப்பகுதியில் குடியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தாம் அப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களையே அப்பகுதியில் குடியேற்றுவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், பிரதேச செயலாளரும் எவ்வளவோ வலியுறுத்தியும் அது எடுபடவில்லை.
தம்மை புலிகள் முல்லைத்தீவிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர், தமது காணிகளை புலிகள் தமிழர்களுக்கு விற்றுவிட்டதாகவும், தாம் மீளக்குடியேற சென்றபோது தமது காணிகளுக்கு வேறு யாரோ உரிமைகோரி நின்றனர். இதனால் முல்லைத்தீவு முஸ்லிம்கள் காணிகள் இன்றி அலைந்தனர். இந்நிலையிலேயே அரசாங்கம் காடுகளை வெட்டி, அதில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற அனுமதித்தது.
இவ்வாறு குடியேற்றப்படவிருக்கும் முஸ்லிம்களுக்கும், அவர்களை குடியேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குமே சில தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் சில ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றதாகவும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பட்டுந்திருந்தாத சமுகம், சம்பவ இடத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் காணி அற்ற தமிழ் மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோர் என்ற ரீதியியல் முஸ்லிம் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனாலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை எனும் போக்கு. இதனால் அல்லவா இருந்ததையும் இழந்தாய். தமிழர்களுக்கு காணி ஒதுக்கிய பின்னர்தான் முஸ்லிம்களுக்கு காணி ஒதுக்கவேண்டும் என்பது இவர்களது வாதம். நியாயமாக சிந்தித்துப்பார்த்தால் தமிழ் தலைமையும் தமிழ் மக்களும் முஸ்லிம்களுக்கு முதலில் காணி ஒதுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். காரணம் வடபுல முஸ்லிம்கள் தமிழர்களல்தான் அநியாயமாக வெளியேற்றப்பட்டார்கள், பின்பு அவர்களின் சொத்துக்கள் அடிமாட்டு விலையில் தமிழர்களால் கொள்வனவு செய்யப்பட்டது. ஆயின் தமிழர்களும் தமிழ்த்தலைமையும் நியாயத்தை நேசிப்பவர்களாக இருந்தால் முஸ்லிம்களுக்கு முதலில் காணி ஒதுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கிடைப்பதை சுருட்ட நினைக்கும் பாவம் தான் காணப்படுகிறது. முஸ்லிம்களை அரவணைத்து சென்றிரிந்தால் ஒரு வேளை நீ கனவு காணும் தமிழ் ஈழத்தை வென்றிருப்பாய் தமிழா, முஸ்லிம்களை வெளியேற்றியதால் அல்லவா இலகுவின் எதிரியை வெற்றி கொள்ளவிட்டாய், இன்னுமா புத்திவரவில்லை?, சரி முஸ்லிம்களின் காணி எங்கே போனது? அடிமாட்டு விலைக்கு புலிகலிடம் வாங்கியது நீ தானே அதனை விட்டுக் கொடு அதற்கும் இணங்கமாட்டாய். தமிழா ஆத்திரத்தோடு பார்க்காதே நிரபராதியும் குற்றவாளியாய் தெரிவான். அனுதபத்தோடு பார்க்காதே குற்றவளியும் நிரபராதியாய்த் தெரிவான் எனவே நடுநிலையாக சிந்தித்து முடிவெடு, பசுவின் கன்றை கொன்றான் என்பதற்காய் நீதியை நிலைநாட்ட தன் மகனைத் தேரேற்றிக் கொன்றான் அரசன் என்பதெல்லாம் வெறும் இதிகாசக்கதைகளா? இப்போதெல்லாம் நீதி வழுவாமை என்ற பண்பு இல்லையா உன்னிடத்தில்!!! தமிழ் தலைகள் என்று சிந்திக்கும் நேர்மையாய் நியாயமாய் வாழ்வதற்கு?
ReplyDeleteஇதுதான் தமிழ் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு நீட்டும் நேசக்கரம், அன்பு, ஆதரவு, இதனை முன்னரே அறிந்திருந்தால்தான் முஸ்லிம்கள் எப்போதும் தமிழ்தலைமைகளுடன் ஒத்துப்போக முடியாமல் இருக்கின்றனர் என்பதை தமிழ் தலைமைத்துவம் புரிந்துகொள்ள வேண்டும் நீங்கள் முஸ்லிம்களை புறக்கநித்ததால்தான் இன்று அத்தனையும் இழந்து நிற்கின்றீர்கள் தொடர்ந்தும் இந்த அவலநிலை நீடிக்க வேண்டுமா அல்லது இன நல்லுறவு வேண்டுமா என்பதை செயலில் காட்டுங்கள் இன்னும் அத்தனை ஆயிரம் பிரபாகரன் வந்தாலும் முஸ்லிம்களின் ஆதரவு இன்றி உங்களால் எதையும் பெறமுடியாது காரணம் முஸ்லிம்கள் அனைத்தையும் படைத்த இறைவனிடம் மட்டும் வேண்டி நிற்பவர்கள்
ReplyDeleteஉண்மையை அப்படியே உரைத்தீர்கள் . நீண்டகாலமாக முல்வலத்தீவில் முஸ்லிம்களும் நட்புறவுடனே வாழ்ந்து வந்துள்ளார்கள். துரதிஷ்டவசமாக 20 வருட சோக வறலாற்றின் பின்னர் . பழைய இனக்குரோத செயல்களை மறந்துமூண்டும் ஒண்றாக வாழும் நிலையில் மிண்டும் இனக்குரோதத்தை ஏர்படுத்தி அதில் அரசியல் இலபம் ஈடட்டி இனவாதத்தில் கூதல் காய விரும்பும் வம்பர்களின் கோளைத்தனத்தை நிருபித்துக் காட்ியுள்ளனர்.
ReplyDeleteஇந்த குரோதச் செயலை பின்புலத்தில் நிண்று நடத்துபவர்கள் முல்லை மண்னைப்பிறப்பிடமாக கொள்ளாதவர்களே. முல்லை மண்னில் இனமுறுள் ஏற்ப்பட்டால் அதனல் பாதிப்படையப் போவது அவர்களல்ல முல்லை மண்னின் வாரிசுகளே.
Allahu akbar Allah oruvan irukkinran
ReplyDelete