இலங்கை முஸ்லிம்கள்மீது அமெரிக்காவின் கவனம் - விரைவில் அறிக்கை வெளியாகும்
(Tm) முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
'கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களினால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என அமெரிக்க தூதுவராலய ஊடக பிரிவின் பொருப்பாளர் கிரிஸ்டோபர் டீல் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையுடன் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு சிலாபத்தில் நேற்றுமுதல் இடம்பெற்றுவருகிறது. இதன் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
'இந்த பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்று விரைவில் வெளியிடவுள்ளது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குட்டையை குழப்பாமல் இருந்தால் சரி
ReplyDelete