Header Ads



வேலியே பயிரை மேயும் நிலை..!



(சத்தார் எம். ஜாவித்) 

ஜனாதிபதியின் ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் இன, மத பேதமின்றி வாழ வேண்டும் என்ற கோட்பாடு தற்போது பேச்சளவில் மட்டுமே காணப்படுவதாக புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுபான்மையினர் மீது மேற் கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை கட்டுப்படுத்தி சட்டத்தை மீறுபவர்களை செயல் ரீதியாக  கட்டுப்படுத்தாமல் வாயலவில் கூறிவருவதானது சிறுபான்மையினரை   அரசு பாதுகாக்கவில்லை என்பதனையே புலப்படுத்தகின்றது.

முன்பு தமிழர்கள் தாக்கப்பட்டனர், இன்று முஸ்லிம்கள் நாளை கத்தோலிக்க மக்கள், குட்டக்குட்ட குட்டுபவனும் மடயன் குட்டுவாங்குபவனும் மடயன் என்ற நிலைமைகள் நீடிக்கமானால் இலங்கையில் மற்மொரு இரத்தக்கலரி எற்படும் என்பதில் ஐயமில்லை 

கடந்த மூன்று தஸாப்பகால யத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இனி இன,மத, குல பேதங்கள் இருக்கக்கூடாது எல்லோரும் இந்நாட்டு மக்கள் அதாவது இலங்கையர் என ஜனாதிபதி இன்று வரை கூறிவருகின்றார் ஆனால் அது இங்கு நடைபெறவில்லை.

நேற்று முளைத்த காளான்போல் பௌத்த இனவாத குழு ஒன்றும் இன்னும் அரசுடன் ஒட்டியிருக்கும் ஜாதிக ஹெல உறுமைய உள்ளிட்ட சில காடையர்கள் ஜனாதிபதி எதையும் சொல்லட்டும் நாம் செய்வதுதான் சட்டம் என சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அகங்காரத்துடன் சிறுபான்மையினர் மீது தான்றோன்றித்தனமாக செயற்படுவது இலங்கைவாழ் உண்மையான பௌத்த. இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மக்கள் மத்தியில் பாரிய வேதனையை எற்படுத்தியுள்ளது.

யுத்த வெற்றிக்குப்பின்னர் இலங்கையில் அணைத்து இன மக்களும் எதவித பிரச்சினைகளுமின்றி சமாதானமாக வாழ்வதாகவும் அவர்களுக்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அரசுக்கு ஆதரவானவர்களும், அரசுக்கு எதிரானவர்களுமாகிய இரண்டு குழுக்களே உள்ளதாக  ஜனாதிபதி உலகிற்கு எடுத்திக்காட்டிவரும் இவ்வேளையில் இங்கு என்ன நடக்கின்றது? ஜனாதிபதியின் கூற்றுக்கும் தற்போது சிறுபான்மைச் சமுகத்தின்மீது மேற் கொள்ளப்பட்டுவரும் ஒரு சில பௌத்தமத விரோத காவியுடை தரித்த காடையர்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களையும், ஐயமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் தலைவர் என்ற வகையில் அனைத்து இன மக்களினதும் உயிர். உடமைகள்,  சமய, பொருளாதார விடயங்களுக்குப் பங்கம் எற்படாது ஆட்சியைக் கொண்டு செல்பவராக இருப்பதே தலைவருக்கான முதற்கடமையாகும். ஆனால் ஆட்சித் தலைவராக ஒருவர் இருக்க அவரை மீறி சட்டத்தை கையில் எடுக்கும் குழுக்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாத நிலையா? அல்லது அவர்களின் இனவாதச் செயற்பாடுகளுக்கு  மறைமுகமாக பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதா? என்பதிலும் மக்களுக்கு சந்தேகங்கள் இருப்பதாக புத்தி ஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி அவர்கள் பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமைய என்பனவற்றின் பெயரைச் சொல்லி மத நிந்தனைகளை கட்டுப்படுத்தமாறு கூறாது பொதுவான கருத்துப்பட கூறிவருவதிலும் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது. இதனால் அவர்கள் அரசர்கள் என்ற நினைப்பில் செயற்பட தூண்டப்படுவதனையே காட்டுகின்றது.

மேற்படி நிலமைகளை அவதானிக்கும்போது இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதற்குப் பதிலாக சர்வாதிகார போக்கினை கொண்டதாகச் செல்வதனையே காணக் கூடியதாகவுள்ளது. ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு தடியெடுத்தவன் எல்லாம் சண்டியன்மாதிரி காவி உடை என்ற அகங்காரத்தில் நேரடியாகவே மக்களையும் அவர்களின் உடமைகளையும்  தாக்கும் நிலமைகளுக்கு வித்திட்டவர்கள் யார்? இவர்கள் தீவிரவாதிகள் இல்லையா? இந்தத்தீவிரவாதிகளை அடக்க வேற்று நாட்டு  முனைப்புகள் தேவையா? என்பதும் தற்போதுள்ள என்னப்பாடாகும்.

ஜனநாயகம் என்பது எழுத்தளவில் இருப்பதையே இலங்கையில் காணக்கூடியதாகவுள்ளது. ஒரு ஜனநாக நாட்டில் சண்டியர்களின் ஆட்டத்திற்கு இடம்கொடுத்தால் நாடு எங்கேபோய் முடியும்? ஒரு சில குழுக்கள் நீதியையும், சட்டத்தையும் கையில் எடுக்கும்போது அதை அரசும் சட்டத்தையும், நீதியையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இருசாராருக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதையே வெளிப்படையாக காட்டுகின்றன.

இந்த நிலமைகள் தொடருமானால் வேடிக்கை பார்க்கும் தரப்பினர் ஒரு நாளைக்கு அவர்ளால் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரும்  என்பதில் ஐயமில்லை. சட்டத்துறைக்கும், நீதித்துறைக்கும் சவால் விடுவதென்றால் அது எவ்வளவு தூரம் பாயங்கரமானது என்பதனை நாம் கண்டுகொள்ளவேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டங்களை மீறிச் செயற்படுவதானது இலேசான காரியமல்ல. இதற்கு உறுதியான அரசியல் மற்றும் அரச ஆதரவுகள் இல்லாமல் செய்ய முடியாது என்பதனை பாமர மக்களும் உணருவர். இதிலிருந்தது இவர்கள் பலமான ஆதரவும், நிதியும் இல்லாமல் செயற்பட முடியாது என்பது புலணாகின்றதல்லவா? இந்தவகையில் வேலியே பயிரை மேயும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்படி நிலமைகள் சிறுகச் சிறுக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பதையும் மக்கள் கண்டு கொண்டவன்னமேயுள்ளனர். ஒரு சமுகத்தின் மதவிடயங்களில் தலையிட்டு மத நிந்தனைகள் செய்வதென்பது சாதாரண விடயமல்ல. சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்படும் செயற்பாடுகள் இலங்கைக்கு ஆக்கபூர்வமான விடயமல்ல. இலங்கை இன்று யுத்தக் குற்றம் புரிந்த நாடு  என்றபோர்வையில் உலக அரங்கில் பல கேள்விகளுக்கு பதிலளிக்வேண்டிய நிலையில் சிறபாண்மையினர் மீது மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்கள் அந்த நாடுகளுக்கு மேலும் தகுந்த ஆதாரங்கள் கொண்டதாக அவற்றை உறுதிப்படுத்தவதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

குற்றமிழைத்தவர்களை தண்டிக்காது கண்டும் காணாததுபோல் இருந்தால் நாட்டில் எவ்வாறு அமைதியையும், சமாதானத்தையும் காணமுடியும்.

இலங்கையின் யுத்தக்குற்ற விடயங்களில் அதனை பாதுகாப்பதில் ஹலாலை கடைப்பிடிக்கும் இஸ்லாமிய நாடுகள் தான் அதிகம் ஆதரவு வழங்கி வருவதுடன் பல வழிகளிலும் உதவிகளையும் நல்கி வருகின்றன. இவற்றையெல்லாம் பெற்றுக் கொண்டு இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நிந்தனை செய்யப்பட்டுவருவதை அரசு  மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதானது முஸ்லிம்களுக்குச் செய்யும் மிகமோசமா துரோகமான செயலாகவே இன்று முஸ்லிம்கள் காண்கின்றனர். 

உண்மையில் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி வேலைகளான பாரிய பாதையமைப்பு, மேம்பாலங்கள், வைத்திய சாலைகள், மின் உற்பத்தி வேலைகளுக்கான பாரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை எல்லாம் பொதுபல சேனாவினதும், ஜாதிக ஹெல உறுமையவினதும் வம்சாவளியினரது நிதியில் இருந்தா மேற்கொள்ளப்பட்டுள்ளது? என முஸ்லிம் மக்கள் வெட்கங்கெட்ட மேற்படி அமைப்புக்களிடம் கேட்கின்றனர். அறபுநாடுகளின் ஹலாலான வருவாயில் இருந்து பெறப்பட்டு செய்யப்பட்டவையில் ஒட்டுன்னிகள் மாதிரி தாண்டவமாடிக் கொண்டு இலங்கையில் முஸ்லிம்களின் ஷரிஆ சட்டங்களில் தடைகளை எற்படுத்த முனைகின்றனர். 

முதலில் ஹலாலான நாடுகளின் உதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இவைகளை பயன்படுத்தாமல்  விலகிவிட்டு முஸ்லிம்களுடன் முட்டட்டும், ஹலாலல் எதிர்ப்பு என்றால் ஹலால் உருவாக்கப்பட்டவையை  அவர்கள் பயன்னடுத்த முடியாது இதனால் அவர்கள்   முதலில் அவர்கள் காடுகளுக்குள்ளாலேயே பயணம் செய்யவேண்டும் என்பதனை புரிந்து கொள்ளவேண்டும். ஹலால் நாடுகளில் பெற்ற உதவிகளை அவர்களால் திருப்பிக் கொடுக்கமுடியுமா? முதலில் முட்டிக்கொண்டு நுழைவதை தவிர்க்கவேண்டும்.

சமாதனத்தையும், ஒற்றமையையும் விரும்பி வாக்களித்த மக்கள் இன்று பல்வேறுபட்ட இன்னல்களையும், சொல்லொனாத் துயரங்களையும் அடைந்து வருவது அரசியல் தலைமைகளக்கோ அல்லது அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் தமது பதவிக்கு சாவு காலம் வரும்போது அதனை தக்கவைப்பதற்காக ஏழை மக்களின் வீடுகளுக்கு வந்து நீலிக்கண்ணீர் வடித்து மீண்டும் அவர்களின் வாக்குகளை சூறையாடவரும்போதுதான் அந்தத்தருணத்தில் அவர்களின் நிலை தெரியவரும். ஆனால் இன்னுமொரு தேர்தல் வந்தால் இவர்களின் நீலிக்கண்ணீருக்கு செருப்படி கிடைத்தாலும் அது ஆச்சரியமல்ல.

எனவே தொகுத்து நோக்கும்போது உண்மையான ஜனநாயகம் நிலைபெறவேண்டுமானால் அதனை நடைமுறைப்படுத்தபவர்கள் சகல இனமக்களையும் சமமாகப் பார்க்கவேண்டும், பெரும்பாண்மை என்ற காரணத்திற்காக சிறபாண்மையினரின் சமய விடயங்களில் கைவைக்கும் சட்டத்தை கையில் எடுக்கும் குழுக்களுக்கு பாரபட்சமற்ற விதத்தில் சரியான முறையில் தண்டனைகளை வழங்க தயங்கக்கூடாது. இவ்வாறான நிலமைகள் இடம்பெறாதவரையில் சிறுபான்மையினர் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது.

No comments

Powered by Blogger.