Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி கண்டும் காணாது போல இருக்கிறார்


(Vi) முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளை கண்டும் காணாது போல் இருக்கும் இன்னுமொரு பௌத்த பிக்குவே மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இவ்வாறு பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜெனீவா பிரச்சினையை மறைப்பதற்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இனவாத அமைப்பே இந்த பொதுபல சேனா என்ற அமைப்பு. இந்த அமைப்பின் செயற்பாடால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 1915 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வாழ்ந்த சக்திவாய்ந்த இனமாக முஸ்லிம், தமிழ் இனங்கள் காணப்படுகின்றன. எனவே இந்த நாட்டை யாரும் சொந்தமாக்கி விட முடியாது. இவ்வாறிருக்க பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த இனவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எதிராக பௌத்த பிக்குகள் செயற்பட கூடாது. மாறாக குடும்ப ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராடுவதே சிறப்பானதாக இருக்கும். அதனைவிடுத்த பௌத்த பிக்குகள் தேவையில்லா விடயங்களில் ஈடுபடக் கூடாது என்றார்.

3 comments:

  1. சரியான கருத்து

    ReplyDelete
  2. உங்களது மனம் திறந்த கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரனே.

    ReplyDelete
  3. you are appreciated and encouraged Brother..!

    ReplyDelete

Powered by Blogger.