கடத்தப்பட்டால் காட்டிக்கொடுக்கும் கருவி
பொதுவாக, சமூக சேவைக்காக செல்பவர்கள், போராளிகளால் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழுகின்றன. அதுபோன்ற சமயங்களில், அவர்களது இருப்பிடத்தை, இணையதளம் மூலம் தகவல் தெரிவிக்கக்கூடிய வண்ணம் ஒரு புதிய கைசங்கிலியை மனித உரிமைப் பாதுகாப்பாளர் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இந்த சங்கிலி, மொபைல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி இணையதளத்துடனும், இதனைப் பயன்படுத்துவோரின் தலைமை அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். ஏதேனும் ஆபத்து நேரிடும்போது, இதனைக் கையால் இயக்குவதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்குத் தகவல் தரமுடியும். மேலும் இதில் ஜிபிஎஸ் இணைப்பும் இருப்பதால், ஆபத்தில் இருப்பவரின் இடத்தை மீட்புக் குழுவினர் அறிந்துகொள்ள எளிதாக இருக்கும்.
2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர், நடாலியா எஸ்டிமிரோவா நினைவாக நடாலியா திட்டம் என்று இந்த கை சங்கிலிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. போர் பிரச்சினைகள் இருக்கும் இடங்களில், கடத்தப்படுவது அதிகரிப்பதன் காரணமாக, அது போன்ற இடங்களில் சேவை செய்பவர்களுக்கு, முதலில், இந்த வகையான கை சங்கிலிகளை வழங்க, மனித உரிமைக் குழு திட்டமிட்டுள்ளது.

Post a Comment