Header Ads



அந்த சுற்றறிக்கையை நாம் அனுப்பவில்லை - ஜமாத்-இ-இஸ்லாமி மறுக்கிறது

மும்பை போலீஸ் துறை சார்பில் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஓர் சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 உயர்நிலைப் பள்ளிகளும், 3 கல்லூரிகளும் நடத்தப்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவிகளை மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்து, அவர்களை இஸ்லாமிய 'ஜிஹாத்' போராளிகளாக மாற்றும் பயிற்சியை இந்த கல்வி நிறுவனங்கள் அளித்து வருவதாகவும், போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சுற்றறிக்கையின் பிரதிகள், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது கசிந்துள்ளதால் மக்களிடையே பரபரப்பும், பெரும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. 

இந்த சர்ச்சை தொடர்பாக ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் மகாராஷ்டிர மாநில செய்தி தொடர்பாளர் முஹம்மது அஸ்லாம் காசி கூறுகையில், 'சர்ச்சைக்குரிய இந்த சுற்றறிக்கையை யாரோ சில விஷமிகள் கசிய விட்டுள்ளனர். இதனால் எங்கள் இயக்கத்திற்கு கெட்ட பெயரும் மத இணக்கத்திற்கு பாதிப்பும் ஏற்பட வேண்டும் என்பது இதை வெளியிட்டவர்களின் நோக்கமாக இருக்கலாம். 

அமைதி, நீதி என்ற அறவழியில் அரசு தரப்பினரின் அநீதியை எதிர்த்து எங்கள் இயக்கம் போராடி வருகிறது. எங்களது கல்வி நிறுவனங்களை பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மும்பை போலீசார், தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், போலீசார் மீது நாங்கள் மான நஷ்ட வழக்கு தெடருவோம்' என கூறியுள்ளனர். 

8 comments:

  1. இறை பணி செய்யப் புறப்பட்ட அமைப்புக்களுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் புதியவையல்ல

    ReplyDelete
  2. இஸ்லாமிய அமைப்புக்கள் தொடர்பான இவ்வாறான சர்ச்சைக்குரிய செய்திகளை நாம் பிரசுரிப்பதை தவிர்ந்து கொள்வதே சிறப்பானது. சிலருக்கு இவைகள் நொறுக்குத் தீணியாகிவிடும்.

    ReplyDelete
  3. இஸ்லாத்தினை வாழ வைக்கின்ற பணியினைச் செய்கின்ற அமைப்புக்களை கருவறுப்பதற்கு சூள்ச்சிக்காரர்கள் வழி தேடித்திரியும் இத்தருனத்தில் இவ்வாறான விமர்சனத் தகவல்கள் அச்சதிகாரர்களுக்கு ஆயுதமாகிவிடலாம் .எனவே இயக்கத்தின் பெயரை பிரசுரிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. தெருவால போறத்த சீலக்க எடுத்தமாதிரித்தான் இது இருக்கி. தயவு செய்து இந்த செய்தியை தூக்கங்கோ.

    ReplyDelete
  5. எங்கேயோ நடந்த இந்த சம்பவத்தினை இந்த சூழ்நிலையில் இதில் வெளியிடுவதில் உள்ள தேவைதான் என்ன? இதனால் எமக்கு ஏதும் பிரயோசனம் உண்டா? இவ்வாறான செய்திகள் எமது சமூகத்தின் மீது இன்னும் அழுத்தத்தினைத்தான் கொன்டுவரும். இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு சோடிக்கப்படும் இவ்வாறான தகவல்களை நாங்களும் செய்தியாக பரப்புவதன் மூலம் எதிரிகளுக்கே உதவி செய்கிறோம் தயவு செய்து இவ்வாறான செய்திகளைத் தவிருங்கள்.

    ReplyDelete
  6. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்ல. என்பது போல்தான் இது இருக்கிறது. எத்தனையோ அறிஞர்களும் சமூக நலன் விரும்பிகளும் தற்போதய அசாதாரன சூழ் நிலையினைக் கருத்தில் கொன்டு ஊடகத்தினை எவ்வாறு உபாயங்களை பின்பற்ற வேன்டும் என்று ஜப்னா முஸ்லிமில் அறிவுரைகள் எழுதுகிறார்கள். அதே ஊடகம் அவற்றில் தவறு விடுவது மனவேதனையாக உள்ளது. இது எமது ஊடகம் என்ற பெருமையோடும் பொறுப்போடும் இதனை கூறுகிறேன் இவ்வாறான செய்தி எமக்கு எவ்வகையிலும் உதவப்போதில்லை.

    ReplyDelete
  7. தற்போதைய நிலமையில் இறைவனுக்கடுத்து எமது இஸ்லாமிய அமைப்புக்களும் உலமாக்களும்தான் எமது பாதுகாவலர்கள். இயங்கங்களைப் பற்றிய எவ்வளவோ நல்ல நல்ல செய்திகள் சேவைகள் பணிகள் உலகமெல்லாம் நடந்துகொன்டிருக்கிறது. அவைகளைத் தேடித் தேடி வெளிப்படுத்துங்கள். அவற்றை விடுத்து இவ்வாறான சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடுவதால் தீமைகள்தான் விளையும்.தயவு செய்து இயக்கங்களின் பெயர்களையோ இவ்வாறான விடயங்களையோ பதிவிட வேன்டாம்.

    ReplyDelete
  8. There are many ploys and theories to get Muslims involved into trouble water. The media should be very careful in publishing, highlighting and giving prominence to this type of news. This way we could avoid escalation of tension and publicity. If initial publicity is not available for any mischievous deeds, automatically it would die-down.

    ReplyDelete

Powered by Blogger.