மாலியில் 7 இலட்சம் முஸ்லிம் குழந்தைகள் கல்வி வசதியின்றி தவிப்பு
மாலியில் ஏற்பட்டுள்ள தொடர் இராணுவ மற்றும் அரசியல் பதற்ற நிலை முஸ்லிம் சமூகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவால் சுமார் 7 இலட்சம் முஸ்லிம் குழந்தைகள் கல்வி வசதியின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் 4 இலட்சத்தி 30 ஆயிரம் மாலி முஸ்லிம்கள் தமது இருப்பிடத்தை விட்டு அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சர்வதேச உறவுகளுக்கான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதியின்றி சிரமப் படுவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் உதவியுடன் மாலி இராணுவம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பில் அதிகமான அப்பாவி முஸ்லிம்கள் பலியானமை குறிப்பிடத் தக்கதாகும்.

Post a Comment