கொழும்பில் ஒருமைப்பாட்டுக்கான பேரணி (வீடியோ) - சூழ்ச்சியாளர்களின் சதி முறியடிப்பு
இன்று (28.04.2013) கொழும்பு "கிரீன் பாத்" 10.30 மணியளவில் இல் ஆரம்பமான "ஒருமைப்பாட்டுக்கான பேரணி" 12.30 மணியளவில் நிறைவு பெற்றது. "தாமரைத் தடாகம்" அரங்குக்கு எதிர்ப் பக்கம் ஆரம்பமான இந்நிகழ்வில் பல பிரமுகர்களின் செய்திகளை ஒளிபரப்பிய வண்ணம் ஆரம்பித்து.
ஆரம்பத்தில் கூட்டத்துக்குள் கூட்டமாக ஒரு கும்பல் ஊடுருவி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. இதை அறிந்த ஏற்பாட்டுக் குழு அவைகளை வாங்க வேண்டாம் என்றும் அவை தம்மால் விநியோகிக்கப்படவில்லை எனவும் அறிவித்தல் விடுத்தது. இதைத்தொடர்ந்து அக்கும்பலை மீடியா கமராக்கள் பின்தொடர்ந்த வண்ணமிருந்தன. பொலிசார் விரைவாகச் சென்று அக்கும்பலை விரட்டியதுடன் (கைது செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
அவர்களை தொடந்த ஊடகவியலாளர்களையும், ஏனையோரையும் செல்லுமாறு பணித்தனர். கும்பலின் நோக்கம் நிகழ்வைத் திசை திருப்புவதாக இருந்ததால் ஏற்பாட்டாளர்களும், மக்களும் சுதாகரித்துக் கொண்டு நிகழ்வின் பக்கம் தம் கவனத்தைச் செலுத்தினர். பின்னர் பேரணி அங்கிருந்து பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள சுற்றுவட்டம் வரை அமைதியாகச் சென்றது. அங்கு சென்ற பேரணி முன்னால் சமித தேரர், இம்தியாஸ் பாகிர் மாகர் உட்பட பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர். இவர்கள் உட்பட பல அரசியல் மற்றும் பிரமுகர்களும் தம்மை நாட்டின் பிரஜையாக மாத்திரம் காட்டிய வண்ணம் மக்களோடு மக்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. வண. சமித தேரர் ரத்தினச் சுருக்காமாகவும் அழகாகவும் தனது பாணியில் ஒரு உரையை நிகழ்த்தினார். உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் என பலரும் அழைக்கப் பட்டிருந்தனர். 500 இற்கும் மேற்பட்ட அனைத்தின மக்களும் குறிப்பாக அனைத்தினத்தையும் சேர்ந்த இளம் பராயத்தினர் ஒன்றுகூடியது விசேட அம்சமாகும்.
வீடியோக்களைப் பார்வையிட:
ஏற்பாட்டாளர்களின் நன்றி உரை : http://youtu.be/V9LjNxuWql4

Great voices of great people!
ReplyDelete