வடமாகாண சபை தேர்தலுக்கு ஆதரவு - முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம்
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வடமாகணத்தில் நடாத்த உச்தேசிக்கப்பட்டுள்ள வடமாகாண சபைக்கான தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலேயே இந்த வடமாகாண சபை தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிப்பதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி கூறுகையில்,
வடமாகாண சபை தேர்தல் தொடாபில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. எனினும் வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் விருப்பம். வடமாகாணத்தில் மக்கள் எல்லோரும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பது உண்மைதான். இதற்கு முன்னர் அங்கு பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதே வழிமுறைய வடமாகாண சபை தேர்தல் நடைபெறும் போதும் பின்பற்றலாம். தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு வடமாகாண முஸ்லிம்களுக்கு உரிமையுள்ளது. வடமாகாண முஸ்லிம்கள் எல்லோரும் மீள்குடியேறிய பின்னர்தான வடமாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். இது குறிப்பிட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்குகூட தடையை ஏற்படுத்தலாம்.
எனவேதான் பல்வேறு கள நிளவரங்களை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண சபை தேர்தலுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொண்டது எனவும் ஹஸன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

Instead of false statement that SLMC supports the NPC election, tell the truth that SLMC can’t oppose any decision taken by the Government.
ReplyDeleteThen only you can get one or two minister post in the government.