'முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருக்கின்றதால்தான் ஜனாதிபதியை சந்திக்கமுடிகிறது'
(எஸ்.அன்சப் இலாஹி)
இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஜனாதிபதியை சந்திக்கமுடிகிறது, அமைச்சரவையிலே முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை பேசமுடிகிறது, அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சித்தலைவர்களை சந்தித்து பேசமுடிகின்றது. அதே போன்று பொதுபலசேனா போன்ற அமைப்புகள் மேற்கொள்கின்ற சமூக விரோத செயல்களுக்கெதிராக சட்டத்தை உருவாக்கக்கூடிய அழுத்தத்தைத் கொடுக்கமுடிகின்றது. எல்லாவற்றையும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் செய்ய முடியுமா? என்பதையும் இப்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அக்கரைப்பற்றில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டில் தற்போது இடம்பெற்றுவருகின்ற அசாதரண சூழ் நிலையை கவனத்திற்கொண்டு முஸ்லிம்கள் விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே நாம் கருத வேண்டும் அது முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருப்பவர்களிடமும், வெளியில் இருப்பவர்களிடமும் மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்று மக்களை விழிப்பூட்ட வேண்டிய தேவை நமக்கிருக்கிறது முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான சக்திகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறுகிறார்கள். அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டுமென்று கூறுகின்றவர்கள் அவர்களுடைய இழிவான அரசியல் என்பதை எண்ணத்தில் வைத்துக்கொண்டே இவ்வாறு கூறுகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இருந்து வெளியேறவேண்டும் என்கின்ற அந்த விடயம் நிகழுமாகவிருந்தால் அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய உடனடியான விளைவு அல்லது வெளிப்பாடு என்ன என்பதனை நாங்கள் கேட்க விரும்புகின்றோம். பெரும்பான்மை சமூகத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் ஆட்டம் காணுமா என்ற கேள்வியை வெளியேற வேண்டும் என்று கூறியவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும்.
என்னைப்பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இல்லாமல் இருந்திருந்தால் பொதுபல சேனா கொண்டுபோன பிரச்சாரத்திற்கு தற்போது 1915ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் போன்று, சிங்கள முஸ்லிம் ஒரு பெரிய இன்கலவரம் நாடுபூராகவும் ஏற்பட்டிருக்கவேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் இருக்கின்றமையால் பொதுபல சேனாவினால் செய்யப்பட்டுவரும் பிரச்சாரத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் அடக்கி வாசிக்கின்ற தேவை எல்லேர்ருக்கும் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் அவ்வாறான ஓர் இனக்கலவரம் ஏற்படவில்லை என்பதனை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமல்ல இப்போது எதிரணிகள் பலம் குன்றியிருக்கின்றது அதே மாதிரி எதிரணிகளுடைய குரல் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போன்று இந்த அரச இயந்திரத்தில் பிரயோசனமற்றிருக்கிறது. அந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பிறகு பேசப்போகின்ற எந்தப் பேச்சையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
அது மாத்திரமல்ல ஏன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும். பொதுமக்கள் யோசிப்பதனைப்போன்று நடக்கின்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறிழைத்திருக்கின்றது என்று அரசாங்கத்தினுடைய தவறுகளை பகிரங்கமாக நாம் எடுத்துரைப்போம்.
அதே போன்று அரசாங்கத்தில் இருக்கின்ற தவறுகளை வெளிக்கொணர்கின்றபோது பொதுபலசேனாவையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் கட்டுபடுத்தவேண்டிய தேவை அல்லது ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்படும், அப்படி அல்லா விட்டால் அரசாங்கம் பொதுபலசேனாவுக்கு ஏதாவதொரு வகையில் முட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இருந்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியே தூக்கி எறிகின்ற நிலவரம் வந்து சேரும் அவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி எறியப்படுகின்றபோது இந்த அரசாங்கம் சிறுபான்மைக்கு எதிராக இருக்கின்றது என்பதனை வெளியே கொண்டுவருவதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அல்லது வெளிப்பாடாக அது அமையும் அந்த அடிப்படையில் அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய சமூகத்திற்காக போராடுவதற்கு முயற்சிக்கவேண்டுமே தவிர, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியிறங்கி முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை இன்னும் பலப்படுத்துவதற்கு இன்னும் அனுமதிக்கமுடியாது என்று நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். என்று மேலும் தெரிவித்தார்.

Neengalum unga thalaivarum janathypathy veetuku poai milakaai araitthu kodunga avarai kudumbathudan santhikum vaaippu kidaikkum...
ReplyDeleteபா................ இவங்க சந்திச்சி கிழிச்சிட்டாங்க... இன்னொரு ஜோக் இல்லையா?
ReplyDeleteசிறந்த முடிவு.. அப்ப இவளவும் நடந்தும் நீங்க இன்னும் அரசாங்கத்துக்கு வெளிக்கொண்டு வரவில்லை என்பது உங்கள் பதவி ஆசையை பிரதி பலிக்கிறது அல்லவா ??? உங்களை ஏன் இந்த அரசாங்கம் இன்னும் தூக்கி எறியவில்லை ? உங்களினுடைய மனைவி சகோதரரின் அபாய், ஹிஜாப் மட்டும் கழட்டும் நேரம் வந்த பிறகா ???? உங்களை அல்லாஹ் இவ்வுலகில் தண்டிக்காமல் விடமாட்டான். உங்களின் கிழக்கு மாகாண சமூகத்துக்கு இறைவன் நல்ல புத்திய குடுக்கேனும். நல்ல ஜோக் அடிக்காங்க நம்முட சமூக தொண்டர்கள். இன்னொரு ஜோக் இல்லியா ???
ReplyDeleteJAnadipathiya Santhikaka mudinthum ennaththa kilichcheenga thambi. pothubala senavukkum sinhala makkalukkum entha thodarfum illai. ungalaippol eyakkaththin peyeral vayiru valarppavargal. summa pammaththu kaddamal meendum meendum muslim samuhaththai emattramal erunthal sarithan thambi. ungalukku thaiyil eluthiyathu kidaikkum.
ReplyDeletenakkundaar naavilanthar
ReplyDeleteWho is backing up bbs? If you with the government and you also one of them. What is the point keep your minister post and sitting like a dumb. ..can you point out what are the benefits and development Muslims got through ?.....
ReplyDeleteஇதுவும் சரிதான் ,
ReplyDeleteஇப்போதான் Mr .தவம் விளித்துள்ளார் ....நல் வரவு . தேவை இல்லாத விளக்கமும், வாய் பேச்சும் எத்தனை நாள் மக்களை ஏமாற்ற்றும்...... உங்கள் அரசியலால் மக்களை அடிமாடு போல் ஆக்க வேண்டாம். இது வரைக்கும் இல்லாத அக்கறை இப்போ எப்படி? ஓட்டைக் குடத்தால் உரிமையாளனுக்கு ஒரு பயனும் இல்லை, அதை போல தான் உங்க கட்சியும் நீங்களும்.....மக்களுக்கு சொல்வதென்றால் நல்ல வழிகளையும், தீர்வுகளையும் மட்டும் சொன்னால் போதும் இன்னமும் எல்லாமக்களும் மடையர்கள் அல்ல.....( இது உங்களுக்கு மட்டும் அல்ல மக்களை மடயர்கலாக்க முனையும் அனைவருக்கும் )
ReplyDeleteஇப்போதான் Mr .தவம் விளித்துள்ளார் ....நல் வரவு . தேவை இல்லாத விளக்கமும், வாய் பேச்சும் எத்தனை நாள் மக்களை ஏமாற்ற்றும்...... உங்கள் அரசியலால் மக்களை அடிமாடு போல் ஆக்க வேண்டாம். இது வரைக்கும் இல்லாத அக்கறை இப்போ எப்படி? ஓட்டைக் குடத்தால் உரிமையாளனுக்கு ஒரு பயனும் இல்லை, அதை போல தான் உங்க கட்சியும் நீங்களும்.....மக்களுக்கு சொல்வதென்றால் நல்ல வழிகளையும், தீர்வுகளையும் மட்டும் சொன்னால் போதும் இன்னமும் எல்லாமக்களும் மடையர்கள் அல்ல.....( இது உங்களுக்கு மட்டும் அல்ல மக்களை மடயர்கலாக்க முனையும் அனைவருக்கும் )
ReplyDeleteதலைவர்கள்,அதிலும் அரசியல் தலைவர்கள், தனது சமுகம் சார்ந்த்த மக்களின் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் நிச்சயமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒருபோதும் முடிவெடுக்க மாட்டார்கள். அரசாங்கத்திலிருந்து விலகிவிடவேண்டும் என்று கூறுபவர்கள் தூர நோக்கும் பரந்த சிந்தனையும் கொண்டவர்களல்ல. தொண்டன் சிந்திப்பது போன்றுதான் தலைவனும் சிந்திக்கவேணும் செயலாற்றவேண்டும் என்றால் தலைவன் எதற்கு? தலைவனின் முடிவில் சாணக்கியமும் சமுகமேம்பாடும் தெரிய வேண்டும். கிழக்கில் வாழும் நம்மைப் பொறுத்தவரை அரசுக்கெதிரான, பெரும்பான்மை சமுகத்திற்கெதிரான எந்த முடிவும் எமக்கு எதுவித தாக்கத்தையும் செலுத்தப்போவதில்லை. ஆனால் சிற்றூர்களில் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழும் நமது சகோதர சகொதரிகளின் நிலை? இன்னொரு 1983யை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. தவம் அவர்கள் சொல்வதில் 100 க்கு 100 வீத்ம் உடன்பாடு இல்லையாயினும். அவர் கூறுவதை புறந்தள்ளிப் பார்த்தல் ஆகாது. பல யதார்த்த உண்மைகள் அவரது பேச்சில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteஅப்போ தம்புளள் சம்பவத்திலிருந்து இவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலும் பாராளுமன்றத்தில் அரசாங்க அமைச்சர் பள்ளிவாசல்கள் எதுவம் தாக்கப்படவில்லை முடிந்தால் எங்கு என்று சொல்லட்டும் என சவால் விடும்போது அப்படி ஒன்று நடக்காததுபோல் கையைக் கட்டிக்கொண்டடிருந்தவரகள் இப்போது வாய் சவடு விடுகிறார்கள். வெளியேற அவசியமில்லை வாய் திறந்தால் போதும்
ReplyDeleteநீங்கள் தற்போது மகாண சபை உறுப்பினராக இருக்கின்ற இந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சார காலத்தில் உங்களால் (SLMC) ஆற்றப்பட்ட உரைகளை சற்று நினைத்துப்பாருங்கள்.
ReplyDeleteஅதில் "பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன" என்பதை கூறிக்கொண்டே அரசுக்கு எதிரான வாக்குகளை எடுத்தீர்கள். அப்படித்தானே ?
அப்படி பெற்ற முஸ்லிம்களின் வாக்குகளுடன் அரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையை அமைத்தீர்கள்.
அரசுடன் இணைந்து ஆட்சியமைக்க என்ன உடன்படிக்கை அரசுடன் செய்யப்பட்டது என்பதை இச்சந்தர்ப்பத்திலாவது உங்களால் (மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களால்) கூற முடியுமா ?
அவ் உடன்படிக்கையில் முஸ்லிம்களின் உரிமை தொடர்பில் ஏதாவது உள்ளதா ?
அதாவது, முஸ்லிம்களின் பள்ளிவாயல் தொடர்பாக அல்லது முஸ்லிம்களின் கலாச்சார விழுமியங்கள் தொடர்பாக மற்றும் முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக ஏதாவது உள்ளதா தவம் அவர்களே ?
அவ்வாறான ஒர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பின் இன்று இந்த நிலமை (Buது Baல சேன வின் செயற்பாடுகள்) முஸ்லிம்களுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும் அல்லவா ?
அச்சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு இப்போ ஏதேதோ சொல்கிறீகள் இல்லையா ?
நாட்டில் தற்போது இடம்பெற்றுவருகின்ற அசாதரண சூழ் நிலைக்கு காரணம் முஸ்லிம்கள் விழிப்பாக இருக்காமை அல்ல நீங்கள் (SLMC) விழிப்புடன் செயலாற்றாமையகும்.
இருந்து என்னததான் கிழிச்சிடீங்க. இதற்க்கு பிரகும் பெருசா என்னத்ததான் கிழிக்க போரீங்க. "பழய குறுடி கதவ தொரடி" தான்.
ReplyDeleteஇஸ்லாமிய அறிவும் உணர்வுமில்லாத ,இஸ்லாமிய நடைமுறையோடு அறவே தொடர்பில்லாதஇவர்களைப்போன்றவர்கள்,(தலைவருட்பட)இஸ்லாமிய அரசியலென்ற,போர்வையைப்போர்த்திக்கொண்டு,முஸ்லிம்களின் பிரதி நிதியாக,அமர்ந்து கொண்டு அரசியல் செய்வது,முஸ்லிம்களின் துரதிஷ்டமாகும். இவர்களை நம்பி ,இவர்களின் சுயலாப நோக்கங்களை ஆராயாமல் ,இவர்களைத்தேர்ந்தெடுத்தது, முஸ்லிம்கள் செய்த மாபெரும் வரலாற்றுத்தவறாகும்.ஏனெனில் ஆபத்தில் அறியலாம் தோழனை,என்பது போல்,முழு இலங்கை முஸ்லிம் சமூகமுமே இக்கட்டான நிலையில் இருந்த போது-இருக்கும்போது,முஸ்லிம்களின் வாக்குப்பிச்சையில் பதிவிலமர்ந்தஇவர்கள் வெகுண்டெழுந்து, பிரச்சினையினை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும்,தமது சுக போகங்களையும்,வாழ்வியல் அபிலாஷைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கு பதவியை காப்பாற்றிக்கொண்டு விட்டு இப்போது வேதாந்தம்பேசுகிறார்கள்.மக்களான மடையர்கள் இருக்கும் வரைக்கும் இவ்வாறான சித்த சுவாதீனமற்ற புத்திசாலிகள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.மக்களே! நாம் இதுவரைக்கும் நம்பி ஏமாந்தது போதும்.இனிமேலாவது சிந்தித்து சமோக மட்டத்தில் மஷூறா செய்து,சிறந்த, ஈமானுள்ள,ஆளுமை நிறைந்த ,இஸ்லாமிய அறிவும் வேட்கையுமுள்ள அரசியல் தலைவர்களை இனங்கண்டு ,தேந்த்தெடுக்க வேண்டும்.
ReplyDeleteஅறிவு இல்லாதவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் இப்படி தான் கதைப்பார்கள் !!!!!!
ReplyDeleteLoosup payale Loosup payale Allahvai Payanthukko do not try to mad the Muslim community you do not think as to you all intellectuals of our community actually you all third quality political prostitutes still you try to make the community fool isn’t it. When do you serious on our social matter than your individual political?
ReplyDeleteநடு வகுடெடுத்து
ReplyDeleteபூப்போட்ட சட்டபோட்டு
"நேர்" பழக்கம் இல்லாததால்
கோணலாகப் பார்வையிட்டு
முகத்தையும் கடு கடுக்க விட்டு, அதில்
எழிலையும் தொலைத்துவிட்டு,
சொல்ல வந்த சேதி என்ன?
காலங்கள் ஓடிப்போச்சி, உருப்படியா
காரியங்கள் ஆகவில்லை.
காரியக்காரர்கள், முஸ்லிம்
காங்கிரஸில் காணவில்லை.
காலாவதியான
காங்கிரசுக் காறருக்குள்
கறிக்கும் எடுக்காத
காளான்கள் முளைத்திருக்கு!
தம்பி தவம்,
போதும், இனியும் நாம்
நம்ப மாட்டோம்
உன் புறச் செயலில் அகன்ற நான், உன்
அகச் செயலில் சுருங்கிபோனேன்.
இன்னும் உனக்குக் காலமுண்டு,
இன்பன் ஆக வேண்டுமென்றால்
இன்று அறு இழியவைகள்!
இறைவனிடம் மண்டியிடு, அதை
இயன்றவரை இயக்கிவிடு. இன்னும்
நல்லவைகள் இயங்க விடு!
எல்லாம் பதவிக்காக அடிக்கின்ற ஜால்றாதான்....
ReplyDeleteirattai muham thavam awarhalay. andru arasai vimarsiththu thaan vaakkuppetreerhal athawatu ungalukku viluntha vaaku anti government vote. indru arasil irunthuthaan saathikka vendum engireerhal .inthe karuththai andru pirachchara maydail sollirinthaal maawattathil 15 aawathu idaththukku vandu maahan sabai seetikku padilaha murawoodai kattil irunthiruppeerhal. arasiyalukkaha poi solli makkalai ematra vendam allah ungalai soadippan. irunthu paarungal .
ReplyDeleteirattai muham thavam awarhalay. andru arasai vimarsiththu thaan vaakkuppetreerhal athawatu ungalukku viluntha vaaku anti government vote. indru arasil irunthuthaan saathikka vendum engireerhal .inthe karuththai andru pirachchara maydail sollirinthaal maawattathil 15 aawathu idaththukku vandu maahan sabai seetikku padilaha murawoodai kattil irunthiruppeerhal. arasiyalukkaha poi solli makkalai ematra vendam allah ungalai soadippan. irunthu paarungal .
ReplyDelete"இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஜனாதிபதியை சந்திக்கமுடிகிறது" இது உங்கள் கருத்து.
ReplyDeleteதம்மியோவ்,
கீழே வருவது எங்கள் கருத்து:
நீங்கள் ஜனாதிபதியையும் சந்திக்கலாம், திருப்பதியையும் சந்திக்கலாம், இதில் எங்களுக்கு (மக்கள்) என்ன பயன்?
உங்கள் சந்திப்புகள் உங்கள் நலனுக்கே! இதில், அரை,கால், அமைச்சுக்கள் கேட்கலாம், ஹரீசுக்கு கிடைக்கவுள்ள அரை காலைத் தடுக்கலாம்.
எங்களுக்கு இயற்கையாகவே வரக்கூடியதையும் எடுக்கலாம். எடுத்தபின் தொடர்ந்தும் அப்பாவி மக்களைக் குழப்பலாம். உங்கள் வயிற்றையும் நிரப்பலாம்.
உங்கள் சந்திப்பால் எங்களுக்கு ஆனது என்ன? ஆகப்போவது என்ன?
ஆக பெறுபவைகள் எல்லாம் உங்கள் வயம், மக்களுக்குக் குரியவை எல்லாம் ஐயோ! மாயம்.
சந்தியுங்கோ, நல்லா சந்தியுங்கோ அள்ளிகொங்கோ நல்லா அள்ளிகொங்கோ! சிந்தியுங்கோ நல்ல சிந்தியுங்கோ எப்போதாலும் மக்களைப் பற்றி சிந்தியுங்கோ!
அதோட, இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் அரசை விட்டு விலகத்தான் போகிறீர்கள், அப்போது மக்களிடம் சொல்வதற்கு இன்னுமொரு பொய் சொல்லவும் சிந்தியுங்கோ தம்பி தவம் சிந்தியுங்கோ!
இயலாததை செய்யச் சொன்னதற்காக மன்னியுங்கோ தம்பி தவம் மன்னியுங்கோ) .