Header Ads



கொழும்பில் முஸ்லிம் சகோதரரின் முட்டை லொறி கடத்தப்பட்டது


(Vi) கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் முட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று கடத்தப்பட்ட சம்பவம்   ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கே. எம். ஜே. எக் சென்டர் (முட்டை வியாபாரம்) செய்யும் முஹமட் சமீர் மசூஹ{ட் என்பவருக்கு சொந்தமான 25 இலட்சம் ரூபா பெறுமதியான 226- 2225 என்ற இலக்கத்தையுடைய லொறியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

சம்பவ தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை குளியாபிட்டி, ஹெட்டிபொலவில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து முட்டைகளை கொள்வனவு செய்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட லொறி கொழும்புக்கு திரும்பியுள்ளது.

இதனையடுத்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஜம்பாட்டா வீதியிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு முன்பாக மேற்படி லொறி ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து மறுநாள் ஞாயிற்க்கிழமை காலை லொறியை வந்து பார்த்த போது லொறி முட்டைகளுடன் கடத்தப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு லொறி உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸாரால் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. முஸ்லிம்கள் தங்கள் வாகனங்கள் தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது

    ReplyDelete

Powered by Blogger.