Header Ads



காத்தான்குடியில் பாரிய புடையன் பாம்பு - மக்கள் பீதியுடன் அவதி (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு –காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் மாவத்தையில் இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் பாரிய புடையன்பாம்பு ஒன்று அப்பிரதேச மக்களினால் அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

குறித்த விடயம் தொடர்பாக அப்பிரதேச பொது மக்களிடம் எமது செய்தியாளர் வினவிய போது அதற்கு கருத்து தெரிவித்த அப்பிரதேச பொது மக்கள் அட்வகேட் அப்துல் காதர் மாவத்தையில் கோழி மடுவத்தினால் இந்த பாம்புத்தொல்லை என்றும் அடிக்கடி இப்பிரதேசத்தில் பாம்புத் தொல்லை எனவும் இதற்கு காத்தான்குடி நகர சபை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு மட்டுமன்றி புடையன்பாம்பு அடிக்கப்பட்ட இவ்வீதியில் இருக்கும் தெரு விளக்குகள் சரியாக இயங்குவதில்லை எனவும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இவ்வீதியால் செல்வதற்கு ஒரு வித அச்சம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை,ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம்,நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் காத்தான்குடி பிரதேச காரியாலயம்,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அலுவலகம்,ஸூஹதா பாலர் பாடசாலை ,ஸூஹதா பள்ளிவாயல் என்பன காணப்படுவதால் இவ்வீதியை பயன்படுத்தும் பிரயாணிகள் எண்ணிக்கை கூடுதல் என்பதால் இதற்கு அவசரமாக தீர்வொன்றை பெற்றுத்தருமாறு அப்பிரதேச பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தற்போது அட்வகேட் அப்துல் காதர் மாவத்தையில் புடையன்பாம்பொன்று அடித்து கோழி மடுவத்தினால் பாம்புத்தொல்லை என வாசகம்  எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.