Header Ads



மட்டக்களப்பு - கொழும்பு ரயில் கட்டணங்களில் மாற்றம் (விபரம் இணைப்பு)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ரயில் கட்டண மாற்றங்களுக்கமைய மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரத வண்டியில் பயணிப்போரிடமிருந்து முதலாம் வகுப்பு படுக்கை இருக்கைக்காக 1250 ரூபாவும் (பழையது 1000ரூபா), இரண்டாம் வகுப்பு உறங்கல் இருக்கைக்காக 630ரூபாவும், மூன்றாம் வகுப்பு இருக்கைக்காக 480ரூபாவும் சாதரண இரண்டாம் வகுப்பு இருக்கைக்காக 580 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இரவில் பயணிக்கும் அரைசொகுசு புகையிரதத்தில் சாதரண மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்காக 380ரூபாவும் அறவிடப்படும்.

இதேவேளை மட்டக்களப்பு, மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களின் செயற்பாடுகள்  கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைவாக மேற்படி புகையிரத நிலையங்களில் முன்கூட்டியே ஆசனப்பதிவு செய்வோர் இணையதளத்தின் மூலமும் ஆசனப்பதிவை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதக்கட்டணத்தில் கடந்த 01ம் திகதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.