Header Ads



சுஷ்மிதா சென்னை நான் திருமணம் செய்யவில்லை - வசீம் அக்ரம் மறுப்பு


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். புகழ்பெற்ற வேகப்பந்து வீரரான அவர் தற்போது டெலிவிசன் வர்ணனையாளராக உள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து விலகினார். வாசிம் அக்ரமுக்கும், இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் வாசிம் அக்ரமை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது. இதை சுஷ்மிதா சென் மறுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் இணைய தளத்தில் அவர் கூறி இருப்பதாவது,

வாசிம் அக்ரமை நான் திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியான தகவல் வதந்தியே இது முட்டாள் தனமானது. வாசிம் அக்ரம் எப்போதுமே எனக்கு நல்ல நண்பர். இது மாதிரியான வதந்திகள் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளன.  இவ்வாறு சுஷ்மிதா சென் கூறியுள்ளார். 

இதே போல வாசிம் அக்ரமும் இந்த தகவலை மறுத்துள்ளார்.

2 comments:

  1. "வசீம் அக்ரம் எப்போதுமே நல்ல நண்பர்" என்று சஹீட் அன்வர் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் எப்படி?

    அப்படி சொல்வதற்கு நீங்கள் இரண்டு பெரும் ஒன்றாக சேர்ந்து கிரிகட் விளையாடு னீர்களா?

    ReplyDelete
  2. அவர்கல் இருவரும் விரும்பினால் முடிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.