பாராளுமன்றத்தில் ஹலால் தொடர்பில் இன்று முக்கிய கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் முக்கிய தீர்மானமொன்றில் உடன்பாடு கண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அமைச்சர் பௌஸியின் வீட்டில் ஒன்றுகூடிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன் மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோர் இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் அங்கீகாரம் தேவை மறறும் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் நெருக்குதல்களை குறைக்க அழுத்தம் கொடுப்பதற்கும் முஸ்லிம் அமைச்சர்களின் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை அமைச்சரவை ஹலால் உபகுழு தனது இறுதிக் கூட்டத்தை நடாத்தவுள்ளது. இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள் தமக்குள் உடன்பாடு கண்ட விடயங்களை அங்கு சமர்ப்பிக்கவுள்ளதுடன், தற்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் அறியவருகிறது.
குறிப்பாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்கள் வலியுறுத்துவரெனவும், அதுவரை ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை உலமா சபை கையாளுமெனவும் அவர்கள் வலியுறுத்துவரெனவும் முஸ்லிம் அமைச்சரொருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

we will see weather we like it or no we have to wait some solution should come out from responsible Ministers.
ReplyDeletekoottam podrathilayum manthirimargalukku solli kodukka thewai illaye prayosanama pesungada Kurunegala Abaya problem
ReplyDelete