Header Ads



சண்டியர்களாக அதிகாரங்களை கையில் எடுக்கும் பொதுபல சேனா..!


(சத்தார் எம். ஜாவித்) 

ஜனநாயக நீதிக்கும் சட்டத்திற்கும் மாற்றமாக சண்டியர்காளக அதிகாரங்களை கையில் எடுக்கும் பொதுபல சேனா.

சமாதானத்தை குழப்பி நாட்டில் மற்றுமொரு வன்முறைச் சகாப்தத்தை உருவாக்கி நாட்டை குட்டிச் சுவராக்குவதற்காக முனைப்புடன் செயற்படும் பொது பல சேனாவை உடன் தடை செய்யுமாறு சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் சமயத் தலைவர்கள் மற்றும்  புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவர்களின் தற்போதைய செயற்பாடுகள் பௌத்த மதத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் சிறுபாண்மை மக்களின் மதவிடயங்களில் தலையிட்டு அடக்கி ஒடுக்கும் வன்முறைச் செயற்பாடாகவே ககாப்படுகின்றது.

சாந்தி, சமாதானம், ஒற்றுமை. விட்டுக்கொடுப்பு உள்ளிட்ட சமயம் சார்ந்த நற்போதனைகளை போதித்து நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்க வேண்டியவர்கள் புத்த பெருமானின் கொள்கைகளுக்கு மாற்றமாக பௌத்த தர்மத்தை கொலை செய்யும் கொலையாளிகளாகவே தோற்றம் பெற்றுள்ளனர்.

பௌத்த மதம் வன்முறைகளையும் , காடைத் தனங்களையும், அகங்காரத்தையும் போதிக்கவில்லை மாறாக மனிதன் என்ற புனிதமான சொற்பதத்தினை மிகவும் கண்ணியமாக பேனப்படும் படியான முறையிலேயே போதிக்கின்றது. ஆனால் இன்று பொதுபல சேனா  புத்த பெருமானை சண்டைக்கு கொண்டு செல்லும் விதத்தில் ஏனைய பௌத்தமத சகோதரர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதானது வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல இவ்வாறானவர்களை அடியோடு ஒழிக்கவேண்டிய விடயமுமாகும்.

இந்நாடு கடந்த மூன்று தஸாப்ப காலமாக யுத்தத்தால்  பட்டுவந்த வடுக்களை மறந்து இலங்கை மக்கள் மட்டுமல்லாத ஏனைய உலக நாட்டு மக்களும் கூட இலங்கையில் சமாதானக் காற்றை சுவாசிக்கும் இவ்வேளையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்திய சமாதானத்தை சீர் குலைப்பதாகவே பொதுபல சேனாவின் தற்போதைய நடவடிக்கைகள் இருக்கின்றன.

இந்த நாடு சமாதானத்திற்கும், அமைதிக்குமாக ஏங்கித் தவித் காலம் கணிந்துவரும் வேளையில் உலக நாட்டில் மேலுமொரு குற்றச் சாட்டிற்கும், கேள்விகளுக்கும் பொதுபல சேனாவின் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் வழிவகுத்து விட்டது எனலாம்.

இலங்கையின் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்ட நடவடிக்கைகள் உச்சக்கட்டம் அடைவதற்கு கடந்த காலங்களில் உள்ள பெரும்பான்மை அரசியல் தலைமைகள் சிறுபாண்மையினரின் உரிமைகளிலும், அவர்களின் சலுகைகளிலும் தடைகளையும், முட்டுக் கட்டைகளையும் போட்டு அவர்களுக்கு கொடுக்கவேண்டிய விடயங்களை கொடுக்க மறுத்ததன் விளைவு இன்று பேரழிவுகளையும், சொல்லொனாத் துயரங்களையும் அடைவதற்கும் உயிர்களையும் உடமைகளையும் கூட இழப்பதற்கும் வழிவகுத்துவிட்டது.

அன்றைய தலைமைகள் சிறுபான்மையினரின் விடயங்களில் நெகிழ்வுத் தண்மைகளையும், விட்டுக் கொடுப்புக்களையும் காட்டியிருந்தால் கடந்த மூன்று தஸாப்த கொடிய போர் இடம்பெற்றிருக்காது ஆனால் அரசியல் தலைமைகள் அப்போது விட்ட தவறுகள் பின்னர் அனைவரையும் முழுமையாகவே பாதித்திருந்தது எனலாம்.

பொதுபல சேனாவின் தற்போதைய முனைப்பு சுய நலத்தையும், பணத்தை மையமாக வைத்து இன்று முஸ்லிம் மக்களின் சமய விடயங்களில் கைவைத்துள்ளது. இது அவ்வளவு ஆக்கபூர்வமான விடயமல்ல என்பதனை இவ் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் இந்தச் செயற்பாடு அதிகரிக்க முன்னர் உடநடியாக அரசாங்கமும் ஜனாதிபதியும் தலையிட்டு கட்டுப்படுத்தவேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கை.

இந்த விடயத்தில் அரசு செவிடன் காதில் ஊதிய சங்கொலி போன்றிருந்தால் அதன் பின்னர் ஏற்படும் விபரீதங்கள் சாதாரணமானதாக இருக்குமெனக்  கூறமுடியாது. எனவே வெள்ளம் வருமுன் அணைக்கட்டுவதே சாலச் சிறந்தது.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டதால் தாம் தான் ராஜாக்கள் என்று பொதுபல சேனா நினைத்து இன்று முஸ்லிம்களின் சமய விடயங்களிலும் பின்னர் இந்து மற்றும் கத்தோலிக்க மக்களின் சமய விடயங்களில் கைவைக்கலாம் என்ற கனவும்  கண்டுகொண்டிருப்பது புலணாகின்றது. இச்செயற்பாடுகள் தொடருமானால் அது அவர்களி அழிவுக்கான காலம் ஆரம்பித்துள்ளது எனலாம்.

இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகள் இல்லை. ஆனால் உலக அரங்கில் அவர்கள் இருப்பதை சர்வதேசம் கண்டுள்ளது. ஏன் எமது அயல் நாடான இந்தியாவில் இன்று என்ன நடக்கின்றது. இங்கு பொதுபல சேனா செய்யும் அடாவடித்தனத்தின் பிரதிபளிப்பை இந்தியாவில் காட்டுவது தெரிகிறதல்லவா?

விடுதலைப் புலிகளை குறைவாக மதிப்பெடுத்துவிட முடியாது. ஏனெனில் அவர்கள் ஒருகால கட்டத்தில் உலக அரசுகளையே திகைப்புக்கும், சங்கடத்திற்கும்  உள்ளாக்கியவர்கள். அவர்களின் ஆதரவாளர்கள் உலக அரங்கில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் இலங்கையில் மக்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகள் அவர்களுக்கு சாதகமான தண்மைகளையே இட்டுச் செல்கின்றது என்பதனை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

பல்வேறுபட்ட இழப்புக்களுக்கும், தியாகங்களுக்கும் மத்தயில் தான் இலங்கையில் சமாதானக் காற்று வீசுகின்றது இந்த நிலமைகளை நச்சுப்புகையாக்க உருவெடுத்துள்ள பொதுபல சேனாவை அரசு என்ன செய்யப்போகின்றது? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

புத்தபெருமானின் நற் போதனைகள் அடங்கிய பௌத்த தர்மத்தை கற்றுவிட்டு காவியுடையுடன் அத்தர்மங்களை கொச்சைப்படுத்துவது உண்மையான பௌத்த மக்களினது மனங்களை வேதனைப்படுத்தும் செயற்பாட்டையே பொதுபல சேனா செய்கின்றது என பௌத்த மக்கள் விசனம் கொண்டுள்ளனர். இவ்வாறான மதவாத கடும்போக்குடைய அராஜகக் குழு எதிர்காலத்தில் மீண்டுமொரு அபாயக் கட்ட நிலைக்கு இலங்கையை கொண்டு செல்வதுடன் ஜனாதிபதி ஏற்படுத்திய சமாதானத்தை காவு கொள்ளும் ஒரு செயற்பாடே உருவாகி வருகின்றது. இதனால் உலக அரங்கில் இலங்கைக்கு மேலும் மேலும் அவப்பேரைத்தான் பெறமுடியும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று பொதுபல சேனாவின் செயற்பாட்டில் அனைவருக்குமே சந்தேகங்களும், வெறுப்புகளுமே காணப்படுகின்றது. தனிமனித மற்றும் சமய விடயங்களில் சர்வதேச மனித உரிமைச்சட்டங்களை மீறி செயற்படுகின்றனர். அரசின் சட்டத்துறையும், அதனை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையும் இருக்கும்போது அரச சட்டங்களை சர்வாதிகாரப் போக்கில் கையில் எடுத்து தாம் தான் காக்கிச் சட்டை அணியாத பொலிஸார் என்று கூறுவதானால் அரசாங்கமும், சட்டத்துறையும், நீதிமன்றங்களும், பாதுகாப்புத் தரப்பினரும் எதற்கு என்று மக்கள் கேட்கின்றனர்?. 

இவர்களின் இந்தச் செயற்பாடுகள் இலங்கை அரசியல் யாப்புச் சட்டத்தின்படி எவ்வளவு பாரதூரமானது? தனிமனிதன் அல்லது ஒரு குழு  சட்டத்தை கையில் எடுக்கும் நிலை காணப்பட்டால் அதற்கான தண்டனைச் சட்டங்கள் ஏன் கடைப் பிடிக்கப்படவில்லை? காவி உடை அணிந்த பொதுபல சேனா குண்டர்களுக்கு அரசு ஆதரவு வழங்கிறதா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

இன்றுவரை இந்த நிலமைகள் உண்மைதான் என்பதனை புலப்படுத்துகின்றது. இதற்குச் சான்றாக மக்களையும் அவர்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் அவர்கள் காலியில் குண்டர்களாக செயற்படும் பொதுபல சேனாவின் கலாச்சார மத்திய நிலையத்தை திறந்து வைத்து அவர்கள் தன்வழியில் செல்வதாக குறிப்பிட்டிருந்தமை மற்றும் பிக்குகள் கடுமையாக இருக்கவேண்டும் எனக் கூறிய செய்தியும்  பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியதை கடந்த சில வாரங்களாக ஊடகங்களும், அரசியல் பிரமுகர்களும் சுட்டிக் காட்டியிருந்தமையும் இங்கு உண்மையை  அம்பலப்படுத்தியதாகவே அமைந்துவிட்டது.

இந்தவகையில் பார்க்கும்போது பொதுபலவின் குண்டர் செயற்பாட்டிற்கு தகுந்த பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கின்றமையால் தான் அவர்கள் இந்தளவுக்கு துள்ளுகின்றனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சட்ட ரீதியான விடயங்களை முஸலிம்கள் செய்யும்போது இனத் துவேஷத்தின் உச்சக்கட்டம் காரணமாக அவற்றை தடைசெய்யவேண்டும் என்ற நிலையில் பொலிஸாரை அழைத்துச் சென்று தர்ம சங்கடத்திற்கு உட்படுத்திய நிலைமைகள் கூட சில பொலிஸாருக்கு அண்மையில் இடம்பெற்றள்ளன.

இவ்வாறான ஒரு அராஜகக் குழு சட்டத்தை கையில் எடுத்து செயற்படும்  நிலைமைகள் இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சிமுறைமை சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கான அடிகளை எடுச்துச் செல்வதாகவே கணிக்கப்படுகின்றது.

புலிகள் தமது மக்களின் உரிமைகளுக்காக சட்டத்திற்கு மாறாக ஆயுதம் ஏந்தினார்கள் என்பதற்காக அழிக்கப்பட்டால். பொதுபல சேனா இந்த ஜனநாயக நாட்டில் தாம் தான் காக்கிச் சட்டை அணியாத பொலிஸார் என்று கூறுவதென்றால் அது எவ்வளவு பாரதூரமான விடயம். இதற்குச் சட்டம் என்ன பதில் சொல்லப்போகின்றது? என மக்கள் கேட்கின்றனர்.

இவ்வாறு பல வழிகளிலும் பௌத்த தர்மத்திற்கு மாற்றமாகச் செல்லும் பொதுபல சேனாவை அஸ்கிரிய பீடம், அனைத்து பௌத்த பீடங்கள், அனைத்து பௌத்த மக்கள், புத்தி ஜீவிகள், ஏனைய மத புத்தி ஜீவிகள் எல்லோருமே வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களின் நீதியற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு வழியுறுத்தி வருவதுடன் அரசாங்கத்தையும் இந்தவிடயத்தில் தலையிட்டு இன ஒற்றுமையை ஏற்படுத்துமாறு கோரிவருகின்றன.

எந்தச் சமயமும் அடுத்த சமயத்தை நிந்திக்கவோ அல்லது கொச்சைப்படுத்வோ அல்லது அவற்றில் தலையிடவோ வேண்டாமென்றே கூறுகின்றது. இவையெல்லாம் சமாதாத்தையும், ஒற்றுமையையும், விட்டுக்கொடுப்பையுமே வழியுறுத்துகின்றன. ஆனால் காவி உடையணிந்த பொதுபல சேனா வன்முறைக் கலாச்சாரத்தை தூபமிடுகின்றதாகவே செயற்படுகின்றது.

அப்பாவி பௌத்த மக்கள் தமது பிள்ளைகளை எதிர்காலத்தில் நல்ல துறவிகளாக ஆக்குவதற்காகவே பிரிவேனாக்களுக்கு அனுப்புகின்றனர் காரணம் அவர்கள் புத்பெருமானின் நற்போதனைகளையும் வழிமுறைகளை பின்பற்றி மக்களுக்குப் போதிப்பதற்காகவே. ஆனால் பொதுபல சேனா இந்தப்பிள்ளைகளை தமது கொள்கைகளுக்குள் உட்படுத்தி இன விரிசல்களை ஏற்படுத்தும் வன்முறைக் கலாச்hரத்தை கற்பித்து அவர்களை சண்டியர்களாக ஆக்கி விடுகின்றனர். இந்த விடயத்தில் பௌத்த மக்கள் அதீத கவனமெடுத்து பொதுபல சேனாவின் வன்முறையில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாப்பதே இன்றைய தேவைப்பாடாகும். இல்லாவிட்டால் இவர்கள் எதிர்காலத்தில் பௌத்த மதத்தின் கண்ணியத்தையும், அதன் மகிமையையும் விலைபேசி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.232

2 comments:

  1. Good Message to all citizens of Sri Lanka.This article should be translated into Sinhala and English and reach everybody.

    ReplyDelete
  2. சண்டியர்களுக்கு சண்டித்த்னத்தால் பதில் சொல்லாமல் உலக அரங்கில் இவர்களையும் இவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுக்கும் அனைவரையும் யோசிக்க வைக்கும் நடவடிக்கை தேவை இது நமது நாடு இந்த காடையர்களுக்கு இருக்கும் உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு என்பதை புரியவைக்க வேண்டும் அரபுலீக், சவுதி,கத்தார், துபாய்,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து புத்த தொளிளர்களை சிறிது காலத்திற்கு விடுமுறையில் அனுப்பினால் போதும் இவர்கள் ஓடி ஒழிப்பார்கள் முட்டாள் கூட்டத்தின் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும்

    ReplyDelete

Powered by Blogger.