Header Ads



ஓட்டமாவடியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 90 வீதமானோர் சித்தி


(அனா)

தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் பரிட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சித்தியடைந்த வீதம் 90 வீதம் என்று ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.சுபைர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் ஓட்டமாவடி கோட்டத்தில் பத்து பாடசாலைகளைச் சேர்ந்த 418 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இருந்தனர். இதன் அடிப்படையில் பதினொரு மாணவர்கள் ஒன்பது பாடத்திலும் அதி சிறந்த சித்தி பெற்றதோடு ஆறு மாணவர்கள் எட்டு பாடங்களில் அதி சிறந்த சித்தியையும், பதினான்கு மாணவர்கள் ஏழு பாடத்தில் அதி சிறந்த சித்தியையம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகளும், வாழைச்சேனை ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் முறையே இரண்டு மாணவர்களும், வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவனுமாக மொத்தம் பதினொரு மாhணவர்கள் அதி சிறந்த சித்தி பெற்று தங்களது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


No comments

Powered by Blogger.