Header Ads



அடுத்த மியன்மாராகும் இலங்கை..! (ஒப்பீட்டு ஆய்வு)


(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக ஏக்கூப் பைஸல்) 

ஒரே பார்வையில இலங்கையின் இனப் பிரச்சினைக்கு வித்திடும் தற்காலக் காரணிகளும் மியன்மாரில் இனப்பிரச்சினைக்கு வித்திட்ட ஆரம்பகால காரணிகளும் 

மியன்மாரின் முஸ்லிங்களின் சனத்தொகை வீதமும், கடும் போக்கு வதிகளின் பொய் குற்றச்சாட்டுகளும்

தென் கிழக்காசிய நாடுகளில் இரண்டாவது பெரிய நாடான இரும்புத் திரை என 1989 இல் அழைக்கப்பட்ட பர்மா பிரித்தானியரிடம் இருந்து ஜனவரி. 4 .1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியன்மார் என பெயரினை மாற்றம் செய்த இந்த நாட்டில் அறுபது மில்லியன் சனத்தொகை காணப்படுகின்றது. இந் நாட்டின் 89 வீதமான மக்கள் தேரவாத பௌத்த மதத்தினையும் 5 வீதமான மக்கள் இஸ்லாம் மதத்தினையும் 4 வீதமான மக்கள் கிறிஸ்தவ மதத்தினையுமும் பின்பற்றுகின்றார்கள்.

மியன்மாரில் பௌத்தர்கள் பெரும் பான்மையினராகவும், முஸ்லிம்கள்  சிறுபான்மையினராகவும்  காணப்படுகின்றார்கள். மியன்மாரில் 3.5 வீதத்தில் காணப்படும்  ரேகின் என்று அழைக்கப்படும் பௌத்தர்கள் இனவாதத்தினைத் தூண்டுவதற்கு  சிறுபான்மையினராக காணப்படும் ரோஹிங்யா என்று அழைக்கப்படும் முஸ்லிம்ங்கள்  மியன்மாரில் 89 வீதமாக காணப்படும் பௌத்தர்களை அழித்து நாட்டை பிடிக்கப் போகின்றார்கள் என்றும், பௌத்தர்களை விட சனத்தொகை அதிகரிப்பு ரோஹிங்யா முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது  என்றும் கடும் போக்கு  பௌதர்களின் தலைவர் அஸ்ரின் என்பவர் கருத்துக்களை தெரிவித்து இனப்பிரச்சினைக்கு வித்திட்டார். இதனால் இன்று  பெரும்பான்மை பௌத்தர்கள்  சிறுபான்மையான முஸ்லிம்களை  வேட்டையாடுகின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதமும், கடும்போக்கு வாதிகளின் பொய் குற்றச்சாட்டுகளும் 

இலங்கையில் பௌத்தர்கள் 74 வீதத்துடன் பெரும் பான்மையினராகவும், முதலாவது சிறுபான்மையினரான தழிழர்கள் 12.6 வீதமாகவும், இரண்டவாது சிறுபான்மையினரான முஸ்லிம்கள் 7.1 வீதமாகவும், மூன்றாவது சிறுபான்மையினரான இந்தியா தமிழர் 5 வீதமாகவும், ஏனையவர்கள் 0.8 வீதமாகவும்  காணப்படுகின்றார்கள்.  ஆனால் பௌத்த  கடும் போக்கு வாதிகளின் அமைச்சர் ஒருவரின் கருத்தில் இருந்தும்  தலைமைக் கடும் போக்கு தேரரின் கருத்திலிருந்து  முஸ்லிம்களின் சதவீதம் சிங்களவர்களை விட அதிகரிப்பதாக பொய் குற்றச்சாற்றினை சிங்கள பெரும் பான்மையினத்தவர்களுக்கு மேடை போட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. 

மியன்மார் ரோஹிங்யா சிறுபான்மை முஸ்லிம்கள் வரலாறுகள் இல்லாதவர்களா..?

ரஹிம் என்ற அரபு சொல்லில் இருந்து பிறந்த சொல்லான ரோஹிங்யா  சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த  முஸ்லிம்கள் இந்தியா பிரித்தானியாவின் பிடியில் இருந்தபோது இந்தியாவில் இருந்து  பிரித்தானியர்களால் மியன்மார்க்கு  வேலைக்காக அழைத்து வந்தவர்களும், பங்களாதேஷ் பிரதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களும் தான் ரோஹின்யா இனத்தவர்கள் ஆகும். இவர்களுக்கு மியன்மாரில் குடியுரிமை இல்லை என பௌத்த கடும்போக்கு வாதியான மண்டேலவைச்  சேர்ந்த  பௌத்த பிக்குவான அஸ்ரின் விருது என்பவர் குறிப்பிட்டு இனப் பிரச்சினைகளுக்கு வித்திட்டார். 

இலங்கையில் சோனகர் சிறுபான்மை முஸ்லிம்கள் வரலாறுகள் இல்லாதவர்களா..?

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கின்றது. ஆனால் இலங்கை சோனகர்களுக்கு  வரலாறுகள் கிடையாது எனவும் இவர்கள் வியாபாரிகள் எனவும்  பாடசாலை கல்வித் திட்டத்தில் இஸ்லாம் பாட புத்தகத்தில் முஸ்லிம்களின் வரலாற்றினை பிழையாக எழுதியிருக்கின்றார்கள் எனவும் கடும் பௌத்தவாத அமைச்சர்கள் வரலாறு இல்லாத முஸ்லிம்கள் எனவும் இன்று இலங்கை முஸ்லிம்களை  குறிப்பிட்டு இனப்பிரச்சினைகளுக்கு  வித்திடுகின்றார்கள். 

மியன்மாரில்  இனப்பிரச்சினையை உருவாக்க  சில தேரர்களால் பரப்பப்பட்ட வதந்தி

ரோஹிங்யா முஸ்லிம்களின் சத வீதத்தினை குறைப்பதற்கு 1978 ஆம் ஆண்டு ரேகின் பௌத்தர்களால் இனச் சுத்திகரிப்பு இடம் பெற்றது. இன்றும் கூட இனச்சுத்திகரிப்பு நடைபெறுகின்றது. இன்று நடைபெறுகின்ற இனச் சுத்திகரிப்புக்கு ரோஹிங்யா இனத்தினைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்கள் மூவரால் ரேகின் இனத்தினைச் சேர்ந்த பௌத்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டார் என்ற வதந்தியினை மக்களிடம் பரப்பி அதை மக்கள் நம்பிய உடனே பத்து முஸ்லிம்களை கொலை செய்து இனச் சுத்திகரிப்பினை  ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த பாலியல் வல்லுறவுச் சம்பவம் ரேகின  குடும்பத்தில் பிறந்த பௌத்த இளைஞன் ஒருவன் பௌத்த பெண்னுடன் பாலியல் வல்லுறவினை வைத்திருந்தான் என்பதுதான் உண்மையாகும் .

இலங்கையில்  இனப்பிரச்சினையை உருவாக்க  சில தேரர்களால் பரப்பட்ட வதந்தி

பதுளை நகரில் முஸ்லிம் ஒருவருடைய பென்சி கடையொன்றில் பௌத்தர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட கையுறை சோடி ஒன்றில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டதாக திட்டமிட்டு பௌத்த கடும் போக்கு வாதிகளால் இனப்பிரச்சினைக்கு வித்திடப்பட்டது. ஆனால் முஸ்லிம் பென்சி கடை உரிமையளார்  புத்தரின் சின்னம் பதித்த கையுறையினை விற்பனை செய்யவில்லை என்பதுதான் உண்மையாகும்.  

மியன்மாரில் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட போது பாதுகாப்பு படைகள் பார்த்து கொண்டு இருந்தார்கள்

மியன்மாரில் ஜனநாயத்திற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர்கள் மதரீதியாக தூண்டப்பட்டு கச்சின் மாநிலத்தில் அமந்துள்ள பள்ளிவாசல் ஒன்றை உடைத்தார்கள் அப்போது பள்ளிவசால் உடைக்கப்படுவதை நிறுத்தாது பாதுகாப்பு படைகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

இலங்கையில்  பள்ளிவசால் உடைக்கப்பட்ட போது பாதுகாப்பு படைகள் பார்த்து கொண்டு இருந்தார்கள்

2011 செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி கடும் போக்கு பௌத்த பிக்குகளின் தலைமையில் அனுராதபுரம் - குருநாகல் வீதியில் அமைந்துள்ள ஒட்டுப் பள்ளம் பள்ளிவாசல் தகர்க்ப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகள் கைகட்டி பார்த்துக் கொண்டு இருந்தர்கள். 

மியன்மார் முஸ்லிம்களை கடும் போக்கு பௌத்த பிக்குகள் அழைப்பது

பௌத்த கடும் போக்கு வாதிகள் இனச் சுத்திகரிப்பினை ஏற்படுத்த முஸ்லிம்களை மிக மோசமான வார்த்தையான தென்னாசிய பாலைவனங்களிலிருந்து வந்தோர், வேற்று நாட்டான் என்று கருத்தினை கொடுக்கும் கலர் என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்களை கடும் போக்கு பௌத்த பிக்குகள் அழைப்பது

பௌத்த கடும் போக்கு வாதிகள் அன்மையக் காலங்களாக வரலாறு இல்லாத முஸ்லிம்கள், எனவும் மரக்கல முஸ்லிம்கள் எனவும்  முஸ்லிம்களை குறிப்பிடுகின்றார்கள். மேலும் மரக்கல முஸ்லிம்கள் இந் நாட்டில் இருக்கலாம் ஆனால் பௌத்த மக்களுக்கு நிகராக வழ முடியாது என்ற கருத்தினையும் இலங்கையினை ஒரு பல் கலாசார நாடு இல்லை எனவும் கருத்தினையும்  வெளியிடுகின்றார்கள். 

மியன்மாரில் இனப்பிரச்சினையினை தூண்டும்  நூலினை வெளியிட்டவர்

மியன்மாரில் இனப்பிரச்சினையினை மேலும் வளர்ப்பதற்கு கலாநிதி சான் ஆயே  என்பவர் எழுதிய  முஸ்லிங்களுக்கு எதிரான உட்புகுதல் அரக்கன் சட்டவிரோதமான முஸ்லிம்கள் வைரஸ்கள்  எனும் நூலினை  வெளியிட்டார். இந்த நூல் முற்றிலும் முஸ்லிம்களை வியாபாரம், குடியுரிமை என்பனவைகளை பௌத்த மக்களிடம் இருந்து முஸ்லிம்களை பிரித்து பௌத்தர்கள் முஸ்லிம்களை அழிப்பது  நியாயமானது என சுற்றிக் காட்டக் கூடியதாக பௌத்த மக்களுக்கு முஸ்லிம்களைப் பற்றி பிழையான தகவல்களை வழங்க கூடிய நூலாக இருந்தது.

இலங்கையில் இனப்பிரச்சினையினை தூண்டும் நூலினை வெளியிட்டவர்

இலங்கையில் இனப்பிரச்சினையினை  மேலும் வளர்ப்பதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்பர் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிராக அல்கைதா – அல் ஜிஹாத் என்ற நூலினை பார்க்கும் போது  இலங்கையில் முஸ்லிம்கள் நாட்டை பிடிப்பவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது. இவர்களது பள்ளி வசால்களில் ஜிஹாத் அமைப்பு இருக்கின்றது. முஸ்லிம்களின் வளர்ச்சி வீதம் சிங்களவர்களை விட அதிகம் என சிங்கள மக்களிடம் சுட்டிக் காட்டக் கூடியதாகவும், சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் இனப் பிரச்சினைகளை தூண்டுவதற்கு நம்பக் கூடியவாறு பிழையான தகவல்ளை வழங்க கூடிய நூலாகவும் காணப்படுகின்றது. 

மியன்மாரில்  கடைகளுக்கு பௌத்த சின்ன இஷ்டிக்கர்  பதித்து அடையாளமிடப்பட்டமை

மியன்மாரில் பௌத்தர்களின் கடைகளை பௌத்த மக்கள் இலகுவாக கண்டு பிடிக்கவும்  முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்கவும்  கடும் பௌத்த பிக்குவான கீகீ என்பவரால் பௌத்த கடைகளை அடையாளப்படுத்த  பௌத்த சின்னம் பதித்த இஷ்டிக்கரை கடைக்கு முன்னால் ஒட்டி பௌத்த மக்களை பௌத்தர்களின் கடைகளில் மட்டும்ந்தான் பொருட்களை வாங்கும் படி கட்டளையிட்டார். 

இலங்கையில் கடைகளுக்கு பௌத்த மதக் கொடிகள்  ஏற்றி  அடையாளமிடப்பட்டமை

இன்று இலங்கையில் பல பகுதிகளில் சிற்றூண்டிச் சாலையில் ஹராம் உணவு என அடையாளப்படுத்தியும், சிங்கள வர்த்தக கடைகளில் பௌத்த மதக் கொடிகளை கடைக்கு முன்னால் ஏற்றி சிங்களக் கடைகளை அடையாளப்படுத்தியும் முஸ்லிம் சிங்களக் கடைகள் பிரிக்கப்பட்டு சிங்கள மக்களை முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என கடும் போக்கு பௌத்த பிக்குகள் கட்டளையிட்டு இருக்கின்றார்கள். 

மியன்மாரில் முஸ்லிங்களின் வியாபாரத்தளங்களை கடும் பௌத்த பிக்குகள் தாக்கியமை 

மத்திய பர்மாவின் மக்வா மாநிலத்தில் பௌத்த கடும்போக்கு வதிகளின் பாராளுமன்ற உறுப்பினர் விங் நயிங் என்பவரும் அவரது குழுவும்   முஸ்லிம்களுடைய வியாபார் நிலையங்களை தாக்கி பெறுமதி வாய்ந்த சொத்துக்களை உடைத்து முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிந்த அனுமதி சீட்டுக்களையும் பறிமுதல் செய்தார்கள்;. முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படும் போது பாதுகாப்பு படைகள்  பார்த்து கொண்டு இருந்தது.

இலங்கையில் வியாபாரத் தளங்களை  கடும்போக்கு பௌத்த பிக்குகள் தாக்கியமை  

2013.03.18 ஆம் திகதி கண்டியில் இடம் பெற்ற பொது பல சேனா தலைவர் கல பட அத்தே ஞான சார தேரோ பெஷன்பக் கடைகளில் சிங்கள யுவதிகளை வைத்து அந்தப்புரங்களை நடாத்துகின்றார்கள். சிங்களப் யுவதிகளை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுகின்றார்கள் இதனால் பெஷன் பக் கடைகளை கற்களால் அடித்து நொறுக்கி விட வேண்டாம் என சிலேடையாகக் கூரி அடிக்க வேண்டும் என்றார்.  இதன் பிறகு 2013.03.28. ஆம் திகதி பொரலஸ்கமுவ, பெபிலியான எனும் இடத்தில் அமைத்துள்ள முஸ்லிம் நபர் ஒரு வருக்கு சொந்தமான பெஷன் பக் ஆடை நிறுவனம் பௌத்த விகாரயினை மையமாக கொண்டு 500  கடும் போக்கு பௌத்த வாதிகளை திரட்டி தாக்கப்பட்டது.

மியன்மாரில் கடும்போக்கு பௌத்த பிக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் பொய்ப் பிரச்சாரம்

மண்டலாவைச் சேர்ந்த அஸ்ரின் விருது என்ற பௌத்த பிக்குகளின் தலைவர் மியன்மார் முஸ்லிம்களின் கடைகளை அடித்து உடைக்க வேண்டும், கல்வியுரிமைகள் பறிக்கப்பட வேண்டும். அவர்களை நாட்டை விட்டு  அடித்து விரட்ட வேண்டும், முஸ்லிம்கள் பர்மாவினை பிடிக்க வந்து இருக்கின்றார்கள். பௌத்தர்கள் அமைதிப் போக்கை கடைபிடிக்கக் கூடாது நாம் பௌத்த மதத்தினைப் பாதுகாக்க ஏனைய மதத்தவர்களின்  உயிர்களை பறிக்க வேண்டும் இல்லை என்றால் எமது மதத்தினைக் காப்பாற்ற முடியாது பௌத்தர்கள் அன்பாக இருந்தால் பௌத்த மதம் வளராது என கடும் போக்கு வாதிகளின் தலைவர் தேரர் அஸ்ரின் விருது கருத்துக்களை தெரிவிக்கும் போது அவரது கருத்தில் மயங்கிய கடும் போக்குவாத பௌத்த மக்கள் முஸ்லிம்களை கொண்டு குவிக்கின்றார்கள். 

இலங்கை கடும்போக்கு பொளத்த பிக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் பொய்ப் பிரச்சாரம்

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு இல்லாதவர்கள், பௌத்த மக்களை கட்டாய மதமாற்றம் செய்கின்றார்கள், முஸ்லிம்களிடம் ஆயுதப் படை இருக்கின்றது. அடிப்படைவாதிகள் வளர்கின்றர்கள், தாலிபான்களுக்கு  பண உதவி செய்கின்றார்கள். முஸ்லிங்களின் சனத் தொகை வளர்ச்சி சிங்களவர்களை விட அதிகம். முஸ்லிம்கள் நாட்டை பிடிக்கப் போகின்றார்கள் என்று சிங்கள இணையத்தள ஊடகங்களை ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு முஸ்லிம்களை பற்றிய தவறான கருத்துகளை எத்தி வைக்கின்றார்கள். இதனால் கடும் போக்கு பௌத்தர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள், மாநாடுகள் நடத்துகின்றார்கள், பள்ளி வசால்களையும், வியாபாரத்தளங்களையும் தாக்குகின்றார்கள். ஹிஜாப், ஹலால் உணவுகளை தடுக்கப் போராடுகின்றார்கள். 

மியன்மார் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் 

மியன்மார் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு படைககள் முழுமையாக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பினை வழங்கவில்லை. கல்வியுரிமை மறுக்கப்பட்டமை, கலாச்சார சுதந்திரம் பறிக்கப்பட்டமை. பொருளாதாரச் சுதந்தரம் பறிக்கப்பட்டமை,  அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமை, திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களை காப்பாற்ற ஒரு தலைவன் இல்லாமை, நாட்டை விட்டு வெளியேர முடியாமை, முஸ்லிம்களுக்கு என்ற  சிறந்த ஊடகம் காணப்படாமை  என்பன மியன்மார் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள். 

 இலங்கை முஸ்லிம்கள் தற்போது  எதிர் நோக்கும் பிரச்சினைகள் 

இலங்கையில் கடும் போக்கு பௌத்த வாதிகளால் 30 மஸ்ஜிகளுக்கு மேல் தாக்கப்பட்டது. ஹலால் சான்றிதல் பறிக்கப்பட்டது. ஹிஜாப் ஆடைக்கான பிரச்சினைகள் வளர்கப்படுவது, காதி நீதிமன்றம் விமர்சிக்கப்படுவது,  இஸ்லாமிய வங்கிகளை கடும் போக்குவாத பௌத்தர்கள் முடக்க நினைப்பது, முஸ்லிங்களுக்குரிய தனியார்ச் சட்டத்தினை நீக்க போரட்டங்கள் எடுக்கப்படுவது, முஸ்லிம்களுடைய வியாபாரத்தளங்களை தாக்குவது, முஸ்லிம்களை தூதுவராக நியமிக்க கூடாது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்டுவது, கல்வித்துறைகளில் முஸ்லிம்களை அதிகளவாக உள்வாங்கக் கூடாது என்ற பிரச்சினையினை சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம்கள் அதிகளவாக தெரிவானதும் கடும் போக்குவாத பௌத்தர்களால் முன்னெடுக்ப்பட்டமை, இவ்வாறான  நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசு சிறந்த நடவடிக்கைகளை இதுவரை எடுகாமை, பாதுகாப்பு செயலாளர் உரிய முறையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்காமை என்பன இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் ஆகும்  

இலங்கையில் சிறுபான்மைக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டுகின்ற மற்றும் பௌத்த தர்மத்திற்கு ஏதிராக செயற்படுகின்ற அமைப்புக்களையும்  பௌத்த கடும் போக்கு அரசியல் தலைவர்களையும்,  கடும் போக்கு பௌத்த மத தலைவர்களை அரசாங்கம் கைது செய்து. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின் இலங்கையும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஆதரவுடன்  அடுத்த  மியன்மாராகும் வாய்ப்பு இருக்கின்றது.

மத உரிமைகளை பாதுகாக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் விசேட சட்டக் கோவையினை ஏற்றுக் கொள்ள முடியாது என  அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த எதிர்ப்பின் மூலம் இலங்கை அடுத்த மியன்மார் ஆகும் என்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்துகின்றார்.

பற்றற்ற வாழ்க்கையினை போதிக்கும் புத்த மதத்தினை விற்று
முறையற்ற பணத்தை சம்பாதிக்கு கடும் போக்கு பௌத்தனே 
முஸ்லிம்களை குறிவைக்க யூதனிடம் வாங்கிய டொலரில்
முஸ்லிம்களை தாக்க புனித காவியுடையினை தரிக்காதே !   


6 comments:

  1. உங்கள் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருப்பினும் இலங்கையை மியன்மாரைப் போன்று கருதமுடியாது. மியன்மாரில் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்க யாருமிருக்கவில்லை. மியன்மாரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்ட திட்டங்களைப் பேணி நடக்கும் முஸ்லிம்கள் குறைவாகவே காணப்பட்டனர். ஆனால், இலங்கையில் அரங்கேற்றப்படும் அராஜகங்களுக்கு முஸ்லிம் அமைச்சர்களே வாய்மூடியிருந்தபோது மேர்வின், வாசுதேவ நாணயக்கார, ரணில் விக்ரமசிங்க போன்ற அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் கூட முஸ்லிம்களுக்காகப் பகிரங்கமாகப் பேசியதோடு எதிர் அணியினரான பொதுபல சேனாவை குறிப்பிட்டே குறைகூறினர். எனவே அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனைகள், தொழுகைகள், தர்மங்கள், எமது பொறுமை மூலம் அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவான்.

    ReplyDelete
  2. Good analysing contemporary article.this should be an eye opener for our Muslim leaders & organizations as well as Muslim ummah.

    ReplyDelete
  3. இப்போது சுமுகமானதொரு நிலைமையிலிருக்கும்போது இப்படியொரு ஆய்வுக்கட்டுரை காலதாமதமாகி வெளியாகவேண்டி அவசியமில்லை. நடந்தவைகள் யாவும் நல்லதோர் பாடமாக அமையட்டும்,தற்போதைய நிலைமையில் இதுபோன்ற தலைப்பில் கட்டுரைகள் அவசியமற்றவை ஆத்திரமூட்டக்கூடியவை.

    ReplyDelete
  4. This is very late analyze and for the moment unnecessary also

    ReplyDelete
  5. சிறந்த ஆக்கம் எழுதியிருக்கின்றீர்கள் ஒப்பிட்ட மியன்மார் நாட்டில் நடந்தவற்றையூம் இலங்கை நாட்டில் நடப்பவற்றையூம் நீங்கள் ஒப்பிடு செய்து மக்களுக்கும் அரசியல் வதிகளுக்கும் விளங்கப்படுத்தியிருக்கின்றீர்கள். இப்படி ஆக்கம் சமூகத்தை விளிப்படைய செய்யூம் என நான் நினைக்ன்றேன். ஏன் எனின் இலங்கையூம் மியன் ஆக கூடாது என்பதற்காக நீங்கள் ஒப்பிடு செய்து இருக்கின்றீர்கள்

    ReplyDelete
  6. இலங்கையில் சிறுபான்மைக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டுகின்ற மற்றும் பௌத்த தர்மத்திற்கு ஏதிராக செயற்படுகின்ற அமைப்புக்களையும் பௌத்த கடும் போக்கு அரசியல் தலைவர்களையும், கடும் போக்கு பௌத்த மத தலைவர்களை அரசாங்கம் கைது செய்து. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின் இலங்கையும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஆதரவுடன் அடுத்த மியன்மாராகும் வாய்ப்பு இருக்கின்றது.
    நண்பர் கூறியிருப்பது இந்த கட்டுரையின் மூலம் அனைத்து சிங்கள மக்களையூம் இல்லை கடும் போக்குவாத பௌத்தர்களைத்தான் . இவர்களை கட்டுப்படுத்த விடின் இலங்கையூம் மியன்மார் ஆகும் வாய்ப்பு இருக்கின்றது என்கின்றார் .

    ReplyDelete

Powered by Blogger.