75 வருட வரலாற்றில் வட்டக்கண்டல் வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள்
(S.I.M.Akram)
கடந்த 2012 ம் வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வட்டக்கண்டல் வித்தியாலயம் மிகச் சிறந்த பெறுபேற்றை பதிவு செய்துள்ளது. வித்தியாலயத்தின் 75 வருட கால வரலாற்றில் இப்பரீட்சை முடிவுகளே மிகச் சிறந்த பெறுபேறாகும்.
இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளுள் செல்வி எம்.எச். ஹம்சியா 8 A சித்திகளையும் 1 C சித்தியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
இவ்வித்தியாலயம் பாட ரீதியாக பெற்றுக் கொண்ட சித்தி விபரங்கள் :
1. இஸ்லாம் 100%
2. சைவநெறி 100%
3. தமிழ் மொழி 100%
4. ஆங்கிலம் 69%
5. கணிதம் 69%
6. வரலாறு 54%
7. விஞ்ஞானம் 92%
8. சித்திரம் 100%
9. புவியியல் 100%
10. சுகாதாரம் 100%
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் திட்டமிடல், வழிக்காட்டல், மாணவர்களின் அயராத முயற்சிகளின் காரணமாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேற்றை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்பாடசாலை மாணவ, மாணவிகள் தனியார் வகுப்புகளுக்கு செல்லாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

we wish her all success.
ReplyDeleteSadheela Miss and Basith Sir.