Header Ads



காத்தான்குடி அல்மனார் மாணவர்கள் 100 வீத சித்தி


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

நேற்று வெளியாகிய கல்விப்பெபாதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் 2012ம் ஆண்டு ஜீ.சீ.ஈ சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் 100வீத சித்தியயைப் பெற்றுள்ளதாக காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் அறபு மொழி சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாபிழ் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) தெரிவித்தார்.

இவற்றில் 8ஏ ஒரு பீ பெறுபேற்றை முஹம்மட் ஜௌபர் முஹம்மட் ஜெஸ்லான் எனும் மாணவனும் செய்யத் அஹமட் முஹம்மட் சபீர் 7ஏ சித்தியையும் மற்றும் 5ஏ உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.

குறித்த கல்லூரி மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் சேர்த்து சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.