Header Ads



இந்தோனேஷிய கடலில் 74 மியன்மார் முஸ்லிம்கள் மீட்பு



(Tn) சுமத்ரா கடற்பகுதியில் மீட்கப்பட்ட படகொன்றிலிருந்த 74 மியன்மார் ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகளை இந்தோனேஷிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இந்தோனேஷிய மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் தத்தலித்துக் கொண்டிருந்த இந்த படகை மீட்டுள்ளனர். இந்த அகதிகள் எங்கு பயணிக்கிறார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் அளிக்கப்படவில்லை. எனினும் இவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் படகு மூலம் மியன்மாரிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகள் மீட்கப்படும் போது இவர்களது படகில் உணவு மற்றும் பயணத்திற்கு தேவையான எண்ணெய் எதுவும் இல்லாமல் இருந்ததாக இத்தோனேஷிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 74 முஸ்லிம் அகதிகளில் 5 சிறுவர்கள் மற்றும் 5 பெண்களும் அடங்குவதாக பசார் பகுதிக்கான பொலிஸ் பிரதானி ஜாஜுலி குறிப்பிட்டார்.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையிலான மதக் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வெளியேறி வருகின்றனர்.

1 comment:

Powered by Blogger.