Header Ads



சூனியக்காரிகள் என்ற சந்தேகத்தில் 2 பெண்கள் தலை துண்டித்து கொலை


பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் நாடு, பப்புவா நியூகுனியா. இந்நாட்டில் பேய், பிசாசு மற்றும் மூட நம்பிக்கைகள் தொடர்பான உயிர் கொலைகள் ஏராளமாக நிகழ்ந்து வருகின்றன. 

கடந்த 2011ம் ஆண்டு, பிறந்த ஆண் சிசுவை அவரது தந்தை துடிதுடிக்க கடித்து தின்ற சம்பவம் நாகரிக சமுதாயத்தை திகிலுக்குள் ஆழ்த்தியுள்ளது. இந்த திகில் விலகும் முன்னரே கடந்த மாதம், சூனியக்காரி என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி எரித்த சம்பவம் நடந்துள்ளது. 

இதனையடுத்து, சூனியம் வைத்து ஓய்வு பெற்ற ஆசிரியையை கொன்று விட்டதாக கூறி 2 பெண்களை கடந்த வாரம் போலேல் கிராமவாசிகள் பிடித்துச் சென்றனர். அவர்களை 3 நாட்கள் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி, 2 பேரின் தலையையும் துண்டித்து கிராம மக்கள் நேற்று படுகொலை செய்தனர். 

போலீசாரின் முன்னிலையிலேயே இந்த கோரச் சம்பவம் நடந்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.