Header Ads



'றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி' புத்தகம் மற்றும் இறுவட்டு வெளியீடு (படங்கள்)



(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி'எனும் புத்தகம் 'மற்றும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இரவு 8 மணிக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் றிஸானா நபீக்கின் தந்தைமுஹம்மட் நபீக் மற்றும் குடும்பத்தினர் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சர் பஸீர் சேகுதாவூத்; தமிழத் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மற்றும் உலமாக்கள் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் ஊரப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இரண்டாவது அமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் 'றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி' நூலின் முதல் பிரதி மற்றும் இறுவட்டு என்பவற்றை றிஸானாவின் தந்தைக்கு காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் ஸெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி)வழங்கி வைத்தார்.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி முஸ்தபா தலைமையுரை நிகழ்த்தியதுடன் சிறப்புரையை மௌலவி மின்ஹாஜ் (இஸ்லாஹி) அறிமுகவுரையை   காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கூட்டம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.