Header Ads



பாகிஸ்தானில் 2 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை


பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களை குறிவைத்து சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை, வடக்கு வாரிஸ்தான் பகுதிதயில் ஜியோ நியூஸ் தொலைக் காட்சி நிருபர் மும்தாஜ் என்பவரை சுட்டுக் கொன்றனர். 

இதனைத் தொடர்ந்து, டெய்லி இன்டெகாப் பத்திரிகை நிருபராக சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த முகம்மது ஜான் அப்ரிடி என்பவர் நேற்று மாலை கலத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த  2 படுகொலைகளுக்கும் சர்வதேச மற்றும் பாகிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.