Header Ads



'வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்போம்'எனும் தொனிப் பொருளில் பயிற்சிப் பட்டறை



(பழுளுல்லாஹ் பர்ஹான்)

தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் வழகாட்டலில் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்போம்'எனும் தொனிப் பொருளில் வீதி பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொறுப்பாளர் ஜயவர்த்தனஇகாத்தான்குடி பொலிஸ் மோட்டார் போக்குவரத்து அத்தியட்சகர் ரணசிங்கஇ தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிரேஷ்ட அதிகாரி ஆர்.டப்ளியூ.எம்.ரூபசிங்கஇ தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஓய்வு பெற்ற அதிகாரி சேமலரட்ணஇகாத்தான்குடி முச்சக்கர வண்டிஇவான்இபஸ் சாரதிகள்இகாப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாரதிகள் என்;போர் யார்?இஅவர்கள் எவ்வாறிருக்க வேண்டும்இஅவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்இவீதி விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பதுஇஅப்படியும் ஏற்பட்டால் அதை எவ்வாறு முகம் கொள்வது என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.