தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கும், கூரகலை விஹாரைக்கும் சமரச தீர்வு
பலாங்கொடை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள நிலப்பரப்பில் பௌத்தர்களின் கூரகலை விஹாரை இருப்பதாகத் தெரிவிக்கப்படும் பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைப்பதற்கான உயர்மட்ட மகாநாடொன்று பாதுகாப்பு அமைச்சில் வியாழனன்று 28-03-2013 நடைபெற்றது.
பொதுபலசேனா தமது அடுத்த இலக்கு ஜெய்லானி எனவும் வெசாக் போயா தினத்தன்று அந்த இடத்திற்கு பல ஆயிரக்கணக்கானோருடன் அணி திரண்டு செல்வோம் என்று கூறியிருந்த பின்னணியிலே இப்பிரச்சினைக்கு சமரசமாகத் தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், கூரகலை விஹாரை பௌத்த பிக்குகள், ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகி மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இப்பிரச்சினையை சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார். அவை வருமாறு
1. முஸ்லிம்களுக்காக 22 எக்கர் காணியை ஒதுக்குதல்
2. 54 ஏக்கர் காணியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையில் பொதுவாக ஒதுக்குதல்.
3. நீதிமன்றத் தீர்ப்புப்படி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு கடைகளையும் ஒரு வாரத்துக்குள் அகற்றுதல், அந்த கடை உரிமையாளர்களுக்கு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கடைகளை அமைத்துக் கொள்ள இடமளித்தல்.
4. ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளிவாசல் சார்ந்ததாக அமைந்துள்ள ஒரு கட்டடத்தை அகற்றுதல்.
5. இந்த இடத்தில் யாரும் தங்கி நிற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
6. சிவனொளிபாதமலை போன்று இந்த இடத்தை தரிசித்து விட்டு சமய வழிபாடுகளில் ஈடுபடச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் தருமாறு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.
இக்கூட்டம் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியான கபில ஹேவாவிதாரண தலைமையில் நடைபெற்றது. பலாங்கொட விஜயஜோதி தேரர் மற்றும் தெல்தோட்ட தம்மாபிடிய தேரர் ஆகியோரும் முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் செயலாளர் அஸ்கர்கான், மேல் மாகாண ஆளுநரின் அந்தரங்கச் செயலாளர் நகிப் மௌலான, உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். றியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஏன் இப்படியெல்லாம் செய்யவேணும், எவர் இப்படி இந்தக்கட்டடம் அகற்ற வேண்டும், அந்த இடத்தில் கூடாதீர்கள் எனறு சட்ட திட்டங்கள் திணிக்கிறத்துக்கு.
ReplyDelete1000 ஆண்டுகளுக்கு மேல இந்த இடங்கள் இருக்குது. கிறிமினல்ஸ்தான் இப்படி செய்வாங்கள். இதுக்கு பாதுகாப்பு அமைச்சு வேறை பின்னுக்கு நின்று குண்டரகளோடு மிரட்டிது.
Without BBS no use like this agrement . Wait and see what will happen in future...Now in Sri Lanka they are the decision makers.
ReplyDeleteஇப்படிப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் குறைச்சிடுவானுகள் ,குரங்கு அப்பம் பங்கு வைத்த மாதிரி
ReplyDeleteசேர்ந்துள்ள கூட்டத்தைப் பாருங்க. எல்லாம் கோமாளிக் கூட்டம். இது போன்ற சந்தர்ப்பங்களிலாவது நமது சமூகம் சில விடயங்களைச் சிந்திக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். விட்டுக் கொடுப்பிலாவது புரிந்து கொள்ள வேண்டாமா.
ReplyDeleteஇங்கு (தப்தர் ஜெய்லானி ) நடக்கும் அநியாயங்களில் நமக்கு உடன்பாடு இல்லாவிடினும் ஒரு விடயத்தை கவனியுங்கள்.. "இலங்கைச் சொனகர்களின் வரலாறு சொல்லும் தடையங்கள்" குறி வைக்கப் படுகின்றன.