இன நல்லுறவு ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வைபவத்தில் தேசமான்ய விருது
(இஷாம் மரிக்கார்)
வடமத்திய மாகாணத்தின் தமிழ் மொழிமூல முதல்
தர பட்டதாரிகள் வரிசையில் ஒருவரும், ஓய்வு பெற்ற அதிபருமாகிய அல்ஹாஜ்
எம்.ஐ.தைப்தீன் (J.P) கொழும்பு Tower Hall மண்டபத்தில் அகில இன நல்லுறவு
ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்
ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களினால் சாமஸ்ரீ தேசமான்ய விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டார்.
இவர் அ/உந்துருவ கட்டுக் கொளியாவை மு.வி.,
அ/கனேவேல்பொல மு.ம.வி, அ/அட்ராவ ம.வி., நாவலப்பிட்டி புனிதமரியாள் கல்லூரியின்
இருமொழி மூல பாடசாலை, மாத்தளை சாகிற தேசியப்பாடசாலை, உக்குவளை அஜ்மீர்
தேசியப்பாடசாலை, அக்குரணை அஸ்ஹர் தேசியப்பாடசாலைகளின் முன்னாள் அதிபரும்
ஆவார்.
மேலும் இவர் கெக்கிராவை கஹட்டகஸ்திலிய
தொலைக்கல்வி போதனா ஆசிரியராகவும், வடமத்திய மாகாணத்தின் உயர் தர புவியியல்
ஆலோசகராகவும் கடமையாட்டியுள்ளார்.

Post a Comment