காத்தான்குடியில் மண் விற்ற விடயம் (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பிரதேசத்தில் வடிகானுக்காக தோண்டப்பட்ட 30 டெக்டர் மண்னை விற்ற விடயம் தொடர்பாக கேட்கச் சென்ற என்னை சிபான் என்பவர் தாக்கினார் என காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் அப்துல் லத்தீப் அலி சப்ரி தெரிவித்தார்.
சிபான் என்ற நபர் ஒருவரால் தாக்கப்பட்டு காத்தான்குடியில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் அப்துல் லத்தீப் அலி சப்ரி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேசத்தில் வடிகானுக்காக வெட்டப்படுகின்ற மண்களை சிபான் என்பவர் எடுத்து விற்பதாகவும் அந்த வகையில் புதிய காத்தான்குடியில் வடிகானுக்காக வெட்டப்படுகின்ற எல்லா மண்களையும் புதிய காத்தான்குடியில் மாரி காலத்தில் ஜனாஸா அடக்கக்கூடிய மையவாடி அமைக்க சபையில் ஒரு தீர்மாணம் எடுத்துள்ளதாகவும் அந்த வகையில் புதிய காத்தான்குடி மீன் பிடி இலாகா வீதி எப்.சி.ரோட்டில் வடிகானுக்காக மண் தோண்டப்பட்டிருந்தது அந்த மண்ணில் கிட்டத்தட்ட 30 டெக்டர் மண்னை ஏற்றி சிபான் என்பவர் விற்றிரிப்பதாகவும்; அது சம்மந்தமான தகவல் எனக்கு கிடைத்தவுடன் அந்த இடத்துக்கு நான் சென்று அந்த மண்களை யார் ஏற்றியது? யார் இந்த மண்களை ஏற்றுவதற்கு அனுமதி கொடுத்தது சம்மந்தமாக விசாரித்த போது சிபான்தான் அதை ஏற்றி விற்கிறார் என்ற தகவல் அந்த இடத்தில் தனக்கு கிடைத்ததாகவும் அப்போது உடனே அப்படி சிபான் விற்கமுடியாதே சிபானுக்கு இந்த அதிகாரம் யார் கொடுத்த என்று வினவிய போது அந்த இடத்தில் இருந்த ஒருவர் சிபானுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவுடன் சிபான் வந்து தார் மாறாக தூசன வார்த்தைகளை பிரயோகித்து நீ ஒரு உறுப்பினரா? அதா? இதா? ஆவர் பேசிய அந்த அநாகரியமான வாரத்;தைகளை ஊடகங்களுக்கு தான் சொல்ல விரும்பவில்லையனவும் இருந்தாலும் ரொம்;ப முறை கேடான முறையில் தனக்கு அடித்தார் அந்த சம்பவத்துடன் தான் உடனடியாக வேலைகளை நிறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தாற்போது தான் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் அப்துல் லத்தீப் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
இவரை பார்வையிட காத்தான்குடி நகர சபையின் பிரதித்தவிசாளர் ஜெஸீம் மற்றும் நகர சபை உறுப்பினர்களான பாக்கீர் ,சபீல் நளீமி,சியாட் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீடவார உரைகல் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுல்லாஹ் ;,காத்தான்குடி சம்மேளனத்தின் உப செயலாளர் பஹ்மி மற்றும் நகர சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் வைத்தியசாலைக்கு வந்த வன்னமுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர் கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் அப்துல் லத்தீப் அலி சப்ரி அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment