பெசன்பெக் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு...!
பெசன்பெக் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் இதுதொடர்பில் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.
பெசன்பெக் மீதான தாக்குதலை தெட்டத்தெளிவான வன்முறையென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்ளை கண்டுபிடித்து உடனடியாக சட்டத்தின் முன் கொண்டுவருமாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான சம்பவங்களை தொடருமாயின் இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவை இழக்கவேண்டி வருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளளித்துள்ளதுடன், இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவ்வளவு விரைவாக செயற்பட்டிருப்பதைப் பார்க்கும் போது ஆறுதலாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எங்கேயோ உள்ள வன்னிக்குத்தான் தான் பிரதிநிதி என்ற எண்ணம் இல்லாமல்-தன்னைவிட 'மூத்த' அமைச்சர்கள் இருக்கும் போது தான் எதற்கு அக்கறை எடுக்க வேண்டும் என்று நினைக்காமல்-தனது கட்சியை விட வாக்குப் பலம் கூடிய முஸ்லிம் கட்சி ஒன்று இருக்க, தான் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று பாராமல்-உண்மையான சமூக அக்கறையுடன்- உடனடியாகவே ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டு விடயத்தை எத்தி வைத்ததனைப் பாராட்டியே ஆக வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு எல்லா வழிகளிலும் அருள் புரிவானாக; ஆமீன்!
ReplyDeletehah hah hah he dosent know hah hah hah what is the hell are you talking
ReplyDeleteஎஹெஹீஹிஹி இதுமாதிரி எத்தனை உத்தரவுகள் எமது ஜனாதிபதி இட்டு இருக்கின்றார சீக்கிரம் கண்டுபிடித்து தண்டனை வழங்கி விடுவார்கள் கவலை படவேண்டாம் மிஸ்டர் இர்ஷாத் அவர்களே அடுத்து நீங்கள் அவசரப்பட்டு உங்கள் ஆதரவையோ முஸ்லிம்களின் ஆதரவையோ குறைத்து விடாதீர்கள் பாவம் மஹிந்த அண்ட் கம்பனி படு நட்டத்தில் விழுந்து விடும்.
ReplyDeleteஇவனுகள் அறிக்கை விடவும் நாட்டு தலைவர் என்பாரிடம் முறை இடவும் தான் இவர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள வேலை அதோடு இவர்களின் கடமை முடிந்தது அதற்கான சம்பளம் கஊடிய சீக்கிரம் அனுப்பிவைக்கப்படும் பின் அடுத்த பிரச்சினை வரும்போது இதேமாதிரி repeat
( இதுவரை நடந்த எத்தனையோ பிரச்சினைகள் சொல்லில் அடங்கா ஒரு குற்றவளியாவது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாரா அல்லது தண்டனைதான் அரசாங்கம் பெற்று கொடுத்தா ? என்ன பலன் இந்த .......முறை இட்டு