Header Ads



அம்பாறையில் கரும்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

(முஹம்மட்)

நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு  கரும்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்  அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சீனி உற்பத்தித்துறை அமைச்சர் லக்ஷ;மன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

இவ் உயர்மட்டக் கூட்டத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அமைச்சர் பி.தயரத்ன,மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜயவிக்ரம, அமைச்சின் செயலாளர்கள் மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன உட்பட பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள். மாநகர, நகர.மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள். பலரும் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.