Header Ads



பழிக்குப் பழி


இந்தியாவிலிருந்து லாகூர் சென்ற ரயிலில், தெரு நாய் ஒன்று சென்றதுக்கு பழி வாங்கும் வகையில், 50 தெரு நாய்களை, ரயிலில் திருப்பி அனுப்பியது பாகிஸ்தான். 

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலிருந்து, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், "சம்ஜோதா எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இருநாட்டு எல்லைகளிலும் ரயில் மாறவேண்டும். கடும் சோதனைக்குப் பிறகே பயணிக்க முடியும். 

சில தினங்களுக்கு முன், இந்த ரயில் லாகூர் சென்ற போது, ஒரு பெட்டியில், தெரு நாய் ஒன்று, அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்து நுழைந்து விட்டது. ஆனால், லாகூரில் ரயில்வே அதிகாரி ஒருவரால், இது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் அதிகாரிகள், 50 தெரு நாய்களைப் பிடித்து, அதே ரயிலில் அடைத்து, இந்திய பகுதிக்கு அனுப்பி விட்டனர். அந்நாய்கள் பயங்கர பசியுடன் இருந்தன. எதைக் கண்டாலும், யாரைக் கண்டாலும் தின்பதற்கு விரட்டின. 

No comments

Powered by Blogger.