விழுங்கப்படும் பொத்துவில்..!
(ஹாலு ஹமாதா)
பொத்துவில் பிரதேசத்தின் கிராமசேவகர் பிரிவு 6க்கு உட்பட்ட மண்மலை பிரதேசத்தில் (ஆமரப்புட்டி) தொல்பொருல் ஆராயச்சி நிலையமாக இயங்க வேண்டிய இடம் சட்ட விரோதமான முறையில் விகாரையாக செயற்படுவதோடு குறித்த சட்டவிரோத விகாரைக்கு பிரதம பிக்குவாக செயற்படுபவராலும், அவருக்கு பின்னால் உள்ள பெளத்த அரசியல் வாதிகளாலும், பெளத்த அமைப்புக்களாலும் புதிது புதிதாக நடப்பட்டுவரும் பெளத்த சிலைகள், அசுர வேகம் கண்டுவரும் பெளத்த ஆதிக்கமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கண் கவர் இடமாக காணப்படும் மண்மலை எம் கையை விட்டுப்போய்விடுமா, எதிர்காலத்தில் தற்போது வாழ்ந்து வரும் மக்கள் வழ்வதற்கான சூழ்நிலை காணப்படுமா, அல்லது பெளத்தர்களின் புனித பூமி என்ற பெயரில் கிண்ணியா கருமலை ஊற்று கிராம மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டது போன்று வெளியேற்ப்படுவார்களா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
நாற்பது அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் லத்தீப் (சமிசிர லத்தீப்) என்பவர் தன் வீட்டுத்தேவைக்காக குறித்த சட்டவிரோத விகாரை இயங்கும் இடத்தில் ( முற்றுமுலுதாக மண்னால் மூடப்பட்ட இடமாக காணப்பட்டதாக சம காலத்தில் வாழ்ந்தவர்கள் சொல்லுகின்றனர்) குழி தோன்டும்போது பெளத்த புராதன சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு குறித்த நபரால் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போது பொலீஸாரால் இலங்கை புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவலின்படி குறிப்பிட்ட இடம் முழுதாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது பண்டைய பெளத்த சிலைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சி நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும், அப்பிரகடனத்தில் குழப்ப நிலை காணப்பட்டதால் கைவிடப்பட்டதாகவும் சம காலத்திலிருந்து வாழ்ந்து வரும் மக்களின் கருத்தாடல்கள் இருக்கின்றன. குறித்த இடத்தினை காடுகள் நிறைந்த ,ஆடுகள், மாடுகள் மேயக்கூடிய இடமாக நாங்கள் சிறு வயதில் பார்த்ததானது குறித்த இடம் கைவிடப்பட்டது என்ற கருத்தை உறுதி செய்யக்கூடியதாக உள்ளது.
தலைவர் அஷ்ரப்ஃ அவர்களின் காலத்தில் குறித்த புதைபொருள் ஆராய்ச்சி இடத்தின் செய்தி பெளத்த அரசியல்வாதிகள்,அமைப்புக்களின் காதுகளுக்கு எட்டியபோது தலைவர் அவர்கள் தன்னாலான முழுப்பலத்தினை பயன்படுத்தி அவர்களின் சட்டவிரோத விகாரையமைப்புச் சிந்தனையை தடைசெய்தார்கள்.
தற்போது காணப்படும் சட்டவிரோத விகாரையின் வளரச்சியையும்,பெளத்த ஆதிக்கத்தையும் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவில் இருந்து சுனாமி வரையான காலம்,சுனாமிக்கு பின்னரான காலம் என இரண்டாகப் பார்க முடியும்.
தலைவர் அவர்களின் மறைவில் இருந்து சுனாமிக்கு முன்னறான காலம்.
தலைவர் அவர்களின் மறைவுக்குப்பின்னர் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த புதைபொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கான பிக்குவின் வருகை ஆரம்பிக்கப்பட்டதோடு தகரத்தினால் ஒரு அறையும் அமைக்கப்பட்டு மாதங்களுக்கு ஒரு முறை பிக்கு ஒருவர் வந்து போக்க்கூடியவராக இருந்தார்.காலப்போக்கில் மாதங்களுக்கு ஒரு முறையாக இருந்த வருகை கிழமையாக மாற்றமடைந்து தகரத்தால் அமைக்கப்பட்ட அறை கட்களால் கட்டப்பட்ட அறையாக மாற்றம் பெற்று குறித்த பிக்கு பெரும்பான்மையான நாட்களில் அங்கு தங்கும் நிலை காணப்பட்டது. பின்னர் பிரித் (வனை) ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டதோடு இளம் பிக்குகள் வரவழைக்கப்பட்டு பெளத்தமதம் கற்பிக்கப்பட்டு கைவிடப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் மறைந்த கிராம நிலதாரி ஜப்பார் அவர்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் (சமிசிர தோட்டம்) பிக்குவால் விகாரைக்கு சொந்தமான நிலம் என்று சூறையாடப்பட்டு பெளத்தர்களுக்கு விற்க்கப்பட்டு வீடுகள் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் முஸ்லிம் மக்களுக்கு விற்கப்பட்டதாகும். இது போன்று அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
சுனாமிக்கு பின்னரான காலம்
சட்டவிரோதமாக இயங்கும் விகாரையின் பிக்குவால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குறித்த பிரதேசத்து வீட்டுப்பெண்களையும், முதியவர்களையும் அழைத்து நிவாரணம் கொடுக்கப்பட்ட போது அவர்களை கபலீகரம் செய்து வெற்றுப்பத்திரத்தில் கையொப்பங்களை திரட்டியதானது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அரசமரத்தடி சிலைகள் புணர்நிர்மாணம், புதிய சிலைவைப்பு, அறுகம்பை சந்தி, அறுகம்பை பாலத்தடி போன்ற இடங்களில் புதிது புதிதாக முளைத்த சிலைகள் கையொப்பம் சேகரிக்கப்பட்டதை நிலாவெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. சட்ட விரோத விகாரை மக்கள் மயப்படுத்தப்பட்டு பூரணை, வெசாக் போன்ற விஷேட நாட்களில் பெளத்தர்களால் தரிசிக்க்கூடிய இடமாக மாறியதோடு, நிறுத்தப்பட்ட பிரித் மீள் ஒலிபரப்பு, பிரதேசத்து மக்களோ அல்லது பிர பிரதேசங்களில் இருந்து வரும் முஸ்லிம் மக்கள் பார்வையிடும் உரிமை பறிக்கப்பட்டு அறுகம்பை அதிரடிப்படையினரின் விஷேட பாதுகாப்புடன் முஸ்லிம்களின் நிலங்களை விழுங்குவதற்கான வேலைகள் மிகவும் தெளிவான முறையில் நடைபெற்றுவருகின்றன.
சென்ற மாதம் பொத்துவில் உலமா சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் “பிரித்தை செவிமடுத்து முஸ்லிம்கள் நன்மைகளையும், பிரயோசனங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று சிங்களத்தின் வாடையினை நுகராத மக்களிடத்தில் தற்போதைய பிக்குவால் கோரிக்கை விடப்பட்டுள்ளதானது மக்களை மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளதுடன் பெளத்த ஆதிக்கத்தின் உச்சகட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பல வீதிகள் நீண்ட காலமாக அபிவிருதியினை காணாமல் இருக்கின்ற போது டடயட்ட கிருல்ல தேசத்திற்கு மகுடம் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பிரதி தவிசாளர் ஆசிரியர் தாஜிதீன் அவர்களுக்கு சொந்தமான பல இலட்சம் ரூபா மதிப்புள்ள நிலத்தினை விட்டுக்கொடுக்கப்பட்டதன் காரணமாக மண்மலை கடட்கரையூடாக பிரேத்தியமாக விகாரைக்ககாக போக்குவரத்து வசதிகலுடனான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதும், மண்மலையில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருவதும் மிகவும் ஆபத்தானதாகும். எதிர்காலத்தில் மக்களின் இருப்புக்கு புனித பூமி என்ற பெயரில் வேட்டுக்கள் வைக்கப்படுமானால் (வைக்கப்டுவது உறுதி) நில விட்டுக்கொடுப்பாளரும், வீதி அமைப்பதற்கு அணுமதிவழங்கிய பிரதேச சபையுமே விஸ்பரூபம் எடுக்க இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் சுமக்கவேண்டும்.
செடியாக வளர்ந்துள்ள பெளத்த ஆதிக்கம் மரமாக வளர்ந்து மக்களின் நிலங்களை கிண்ணியா ருமலைகிராம மக்களின் நிலங்களை விழுங்கியது போன்று விழுங்குவதற்கும், காணப்படும் இறை இல்லங்கள் உடைக்கப்பட்டு சிலைகள் வைத்து வணங்கப்படும் இடமாக மாற்றம் அடைவதை தடுப்பதற்கும் பொத்துவில் அரசியல் வாதிகளும்,படித்தவர்களும்,ஊர் பெரியவர்களும் முன்வரவேண்டும்.

Post a Comment